அரியாலை, மானிப்பாயில் வாள் வெட்டுக் குழுக்கள் அட்டகாசம்

யாழ்ப்­பா­ணம் அரி­யா­லை­யில் நேற்­று­ மாலை வாள்­க­ளு­டன் வீடு புகுந்த இனந்­தெ­ரி­யாத குழு உடை­மை­களை அடித்து நொறுக்கி பொருள்­க­ளுக்­குத் தீ வைத்­து­விட்­டுத் தப்­பிச் சென்­றது. இதே­நே­ரம் மானிப்­பா­யி­லும் வாள்­வெட்­டுக் குழு 3 கடைகளின் மீதும் பின்­னர் வீடு புகுந்­தும் பொருள்­களை நாசம் செய்­து­விட்­டுத் தப்­பிச் சென்­றது.

இந்­தச் சம்­ப­வங்­கள் இரண்டு இடங்­க­ளி­லும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தின. கடை­யில் நின்­றி­ருந்­த­வர்­கள் தம்­மைப் பாது­காக்க அந்த இடத்­தி­லி­ருந்து சிதறி ஓடி­னர்.
சம்­ப­வங்­கள் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

யாழ்ப்­பா­ணம் அரி­யா­லை­யில் புறூடி வீதி­யில் நேற்று மாலை 5.45 அள­வில் வாள்­க­ளு­டன் சென்ற 4 பேர் கொண்ட குழு அங்­குள்ள வீட்­டுக்­குள் புகுந்து உட­மை­க­ளை­யும், யன்­னல் கண்­ணா­டி­க­ளை­யும் அடித்­து­டைத்­தது.பின்­னர் பெற்­றோல் ஊற்றி தீயிட்­ட­னர். மகன் எங்கே என்று கேட்டு மிரட்டி வயோ­தி­பர் ஒரு­வ­ரை­யும் தாக்­கி­விட்டு அந்­தக் கும்­பல் தப்­பிச் சென்­றது.
“4 பேர் திடீ­ரென வீட்­டுக்­குள் புகுந்­த­னர். உனது மகன் எங்கே என்று கேட்டு மிரட்டி என்­னைத் தாக்­கி­னர். மகன் இல்லை என்­றேன். வீட்­டி­லி­ருந்த பொருள்­களை அடித்து உடைத்­த­னர். பிறகு பெற்­றோல் ஊற்றி பெறு­ம­தி­யான செற்­றிக்­குத் தீ வைத்­துக் கொழுத்­தி­ விட்­ட­னர். வந்­தி­ருந்­த­வர்­கள் தமது முகத்­தைக் கறுப்­புத் துணி­யால் மறைத்­தி­ருந்­த­னர்” என்று தாக்­கு­த­லுக்­குள்­ளான வீட்­டின் உரி­மை­யா­ள­ரான சண்­மு­க­நா­தன் தெரி­வித்­தார்.
இது தொடர்­பில் அங்கு சென்ற பொலி­ஸார் விசா­ரணை நடத்­தி­னர். எவ­ரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

இதேவேளை மானிப்­பா­யில் நேற்று மாலை வாள் மற்­றும் கைக்­கோ­டா­ரி­க­ளு­டன் மோட்­டார் சைக்­கி­ளில் வந்த மூன்று இளை­ஞர்­கள் மானிப்­பாய் சங்­க­ரப்­பிள்ளை வீதி­யில் லோட்­டன் வீதி சந்­தி­யில் அமைந்­துள்ள மூன்று கடை­க­ளைத் தாக்­கி­னர்.அவர்­க­ளைக் கண்­ட­தும் கடை­க­ளுக்கு வந்­தி­ருந்த பொது­மக்­க­ளும் கடை உரி­மை­யா­ளர்­க­ளும் தப்­பி­யோ­டி­ய­தால் காயங்­களோ உயிர்ச்­சே­தங்­களோ ஏற்­ப­ட­வில்லை.
கடை­க­ளுக்கு முன்­னால் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த ஓட்­டோ­வை­யும் அந்­தக் குழு தாக்­கிச் சேதப்­ப­டுத்­தி­யுள்­ளது. தாக்­கு­த­லா­ளி­கள் கறுப்­புத் துணி­யால் முகத்தை மறைத்­தி­ருந்­த­னர் என்று சம்­ப­வத்தை நேரில் கண்­ட­வர்­கள் தெரி­வித்­த­னர். அதன் பின்­னர் மானிப்­பாய் செல்­ல­முத்து வீதி­யி­லுள்ள வீடொன்­றுக்­குள் குறித்த அடா­வ­டிக் குழு செல்­ல­முற்­பட்ட போதும் வீட்­டுக்­கா­ரர்­கள் கதவை உட்­பக்­க­மாக தாளிட்­ட­தால் கத­வு­களை கோடா­ரி­யால் கொத்­திச் சேதப்­ப­டுத்­தி­யது.
பொருள்­க­ளைச் சேதப்­ப­டுத்­தி­யது. வீட்­டுக்கு முன்­னால் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த மோட்­டார் சைக்­கி­ளை­யும் தாக்­கிச் சேதப்­ப­டுத்­தி­விட்­டுத் தப்­பிச் சென்­றுள்­ளது.

மானிப்­பாய் பொலி­ஸா­ருக்கு அது தொடர்­பில் அறி­விக்­கப்­பட்­டது. அவர்­கள் சம்­பவ இடங்­க­ளுக்கு வந்து பார்­வை­யிட்டு சென்­ற­னர். அது தொடர்­பில் விசா­ரணை நடக்­கி­றது. எவ­ரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
கடந்த 5 வாரங்­க­ளில் இவ்­வாறு 4 க்கும் மேற்­பட்ட சம்­ப­வங்­கள் இடம்­பெற்­றுள்­ளன. இவ்­வா­றான குழுக்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­த­வும் நட­வ­டிக்கை எடுக்­க­வும் எனச் சிறப்­புக் குழு ஒன்றை அமைத்­துள்­ள­தாக வடக்கு மாகாண மூத்த
பிர­திப் பொலிஸ்மா திபர் கடந்த வாரம் அறி­வித்­தி­ருந்­தார். எனி­னும் அடா­வ­டி­கள்
தொடர்­கின்­றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com