அரியாலை இளைஞன் கொலை – விசேட அதிரடிப்படை புலனாய்வு அதிகாரிகள் இருவர் கைது

அரியாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் யாழ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பொலிஸ் பிரிவைச்சேர்ந்த உப பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் தரத்தைச் சேர்ந்துவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் யாழ் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் இன்று மாலை யாழ்ப்பாண நீதிவானின் வாசஸ்தலத்தில் முற்படுத்தப்படுவரென தெரிய வருகின்றது.

கடந்த மாதம் 22 ஆம் திகதி யாழ். அரியாலை கிழக்கு மணியந்தோட்டம் முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில் 24 வயதுடைய டொன்பொஸ்கோ ரிக்மன் என்பவர் சிவில் உடையில் வந்த தாயுத்தாரிகளால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்னர் சிறப்பு அதிரப்படையின் புலனாய்வுப் பிரிவினர் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பன யாழ்ப்பாணம் பண்ணை வீதியில் உள்ள சிறப்பு அதிரடிப் படை முகாமில் இருந்து கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மீட்டிருந்தனர்.
இந்தநிலையில் இன்றையதினம் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com