அரச வேலைகள் கிடைக்கும் வரை இயலுமான பிற முயற்சிகளில் ஈடுபடுங்கள் – பட்டதாரிகளிற்கு முதல்வர் ஆலோசனை

கல்வி கற்று முடிந்த பல இளைஞர் யுவதிகளும், பட்டதாரிகளும் அரச வேலைகளுக்காக ஏங்கிக் கிடக்கின்றனர். அவர்களும் அரச வேலைகள் கிடைக்கும் வரை இயலுமான பிற முயற்சிகளில் ஈடுபட வேண்டும். வேலைகள் எதுவுமின்றி வெற்றாகப் பொழுதைப் போக்குகின்ற போது தான் சண்டைகள், சச்சரவுகள் உருவாகின்றன. என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

மாந்தை மேற்கு பிரதேச சபை பிரதான அலுவலக கட்டடம் மற்றும் திறந்தவெளி அரங்கு திறப்புவிழா
02.05.2017 செவ்வாய்க்கிமை காலை இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவரது உரையின் முழுவடிவம் வருமாறு,

தலைவர் அவர்களே, கௌரவ அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களே, கௌரவ வடமாகாணசபை உறுப்பினர்களே, எனது அமைச்சின் செயலாளர் அவர்களே, உயர் அதிகாரிகளே, உத்தியோகத்தர்களே, சகோதர சகோதரிகளே, எனதினிய குழந்தைகளே!
மன்னார் மாவட்டத்தில் 2016ம் ஆண்டில் எமது அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடையின் கீழும் NநுடுளுஐP திட்டத்தின் கீழும் ஒதுக்கப்பட்ட நிதிகளினால் மேற்கொள்ளப்பட்ட பல அபிவிருத்தி பணிகள் நிறைவு செய்யப்பட்டு இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படுகின்றன. அந்த வகையில் இன்று காலை மன்னார் நகரசபையின் ஆட்சிக்கு உட்பட்ட கீரி கடற்கரையில் உருவாக்கப்பட்ட சுற்றுலா மையத்தை திறந்து வைத்தேன். இப்போது மாந்தை மேற்கு பிரதேசசபையின் பிரதான அலுவலக கட்டடம் மற்றும் திறந்தவெளி அரங்கு ஆகியவற்றை வைபவரீதியாக திறந்து வைத்து உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.
கடந்தகால யுத்தத்தின் போது பாரிய அழிவுகளைச் சந்தித்த மாந்தைமேற்கு பிரதேசசபைக்கான கட்டடத்தினை புதிதாக அமைக்க வேண்டியிருந்தது.
இப் பிரதேச சபை ஏனைய பல பிரதேச சபைகளை விட கூடிய அளவு நிர்வாக நிலப்பரப்பைக் கொண்டது. மடு மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்கள் பிரிவுகளை உள்ளடக்கியது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட 12 பிரதிநிதிகளைக் கொண்ட இச் சபையின் நிர்வாக நடவடிக்கைகளுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த சிறிய கட்டடம் போதாமையால் பல்வேறு கூட்டங்களை வேறு இடங்களில் நடாத்த வேண்டிய நிலைகூடக் காணப்பட்டது.
இக்குறையை நிவர்த்தி செய்வதற்காக NநுடுளுஐP திட்டத்தின்கீழ் 23.25 மில்லியன் ரூபா செலவில் இக்கட்டடம் புனரமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்படுகின்றது. அத்துடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் விளையாட்டு மைதானம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. ஆனால் அவ் விளையாட்டு அரங்கில் பொது நிகழ்வுகளை நடாத்துவதற்கு ஏற்ற ஒரு திறந்த வெளியரங்கு இல்லாத குறை நீண்டகாலமாக இருந்து வந்தது. இக்குறையை நிவர்த்தி செய்வதற்காக NநுடுளுஐP திட்டத்தின்கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா. 1.37 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட திறந்த வெளி அரங்கும் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான புதிய அலுவலகக் கட்டடங்கள், மற்றும் திறந்தவெளி அரங்குகள் இங்கு அமைக்கப்பட்டதன் முக்கிய நோக்கம் இப்பகுதி மக்களுக்கான சேவைகளை நிறைவாக வழங்குவதற்கே. இம் மக்கள் கடந்தகால யுத்தத்தின் போது கடுமையான பாதிப்புக்களுக்கு உட்பட்டவர்கள். இவர்கள் தமது இருப்பிடங்களை, வாழ்வாதார நிலைகளை கட்டி எழுப்புவதற்கு பிரதேசசபைக்கு வந்து நிறைவேற்ற வேண்டிய பல தேவைகள் அவர்களுக்கு இருக்கும். அவ்வாறு வருகின்ற மக்களை மீண்டும் மீண்டும் அலைக்கழிக்காது அவர்களின் தேவைகளை ஒரே தடவையில் நிறைவேற்றக்கூடிய மனப்பக்குவத்தை அலுவலர்கள் கொண்டிருத்தல் அவசியம்.
சிலவேளைகளில் சில கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் இருக்கலாம். அச் சந்தர்ப்பங்களில் பொது மக்களை முறையாக நெறிப்படுத்த வேண்டியது அலுவலர்களின் பாரிய கடமையாகும். அதைவிடுத்து தடைகளை விதிப்பதும் தண்டம் அறவிடுவதும் மட்டும் தீர்வாக அமையாது. தற்போது பிரதேசசபைகளை கொண்டு நடாத்துவதற்கு மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் பிரதேசசபைகளின் செயலாளர்களே அனைத்துக் கடமைகளையும் புரியவேண்டிய தேவை உள்ளது. இவ்வாறு எல்லாக் கடமைகளையும் நிறைவேற்றுகின்றவர்கள் என்ற காரணத்தினால் நீங்கள் சிற்றரசர்களாக மாறிவிடக்கூடாது. மாறாக உண்மையான மக்கள் தொண்டர்களாக இனம், மதம், மொழி ஆகிய வேறுபாடுகளைக் கடந்து அர்ப்பணிப்புடன் சேவையாற்ற முன்வரவேண்டும்.
அடம்பன் பகுதி விவசாயத்திற்கு மிகவும் உகந்த நிலப்பரப்பையும் நீர்வளங்களையும் கொண்ட பிரதேசம். இங்கு விவசாய முயற்சிகள் முழு அளவில் முன்னெடுக்கப்படுவதுடன் உப உணவுப் பயிர்ச்செய்கையிலும் கூடிய ஆர்வம் மக்கள் காட்டுதல் வேண்டும். கடந்த வருடம் மழை வீழ்ச்சியின் அளவு மிகக் குறைவாக இருந்ததால் அரிசி விலை உச்சத்திற்கு போய்விட்டது. அதே போன்று தெங்குப் பொருட்களின் விலையும் அதிக உச்சவிலையை அண்மித்துவிட்டது.
இந் நிலையில் எமது தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய விதத்தில் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். ஒரு சாதாரண குடும்பத்திற்கான நாட் செலவீனம் ரூ1000ஃஸ்ரீ இற்கும் அதிகமாக காணப்படுகின்ற நிலையில் தந்தை மட்டும் பொருள் ஈட்டுகின்றவராகவும் ஏனையவர்கள் தங்கி வாழ்பவர்களாகவும் இருந்து வந்த பழைய முறைமை தற்கால செலவீனங்களுடன் ஒப்பிடும்போது ஒவ்வாத ஒரு முறைமையாகக் காணப்படுகின்றது. பொருளீட்டலில் கணவன், மனைவி, கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்த பிள்ளைகள் என அனைவரும் இணைந்து கொண்டு செயற்படவேண்டும். சிறு சிறு கைத்தொழில்களில் ஈடுபட முனைய வேண்டும்.
நான் பலமுறை என்னை வந்து கண்ட ஒரு அம்மா பற்றிக் கூறியுள்ளேன். அதை இங்கும் பிரஸ்தாபிக்க விரும்புகின்றேன். நான் முதலமைச்சர் பதவி ஏற்று சுமார் ஒரு வருட காலத்தின் பின் ஒரு அம்மையார் என்னைப் புதன்கிழமை அன்ற மக்கள் சந்திப்புத் தினத்தில் காண வந்தார். “எனக்கு 60 வயதாகின்றது. ஒருவரும் இல்லை. எல்லோரும் போரில் இறந்து விட்டார்கள். என்னை முன்னேற்றிக் கொள்ள ஒரு பத்தாயிரம் ரூபா தாருங்கள்” என்றார். “எப்படி அம்மா அப்படி உங்களை நம்பித் தருவது?” என்றேன். “கடன் தாருங்கள். சும்மா இல்லை” என்றார். நான் சிரித்து விட்டு “பத்தாயிரத்தை வைத்து என்ன செய்யப் போகின்றீர்கள்?” என்று கேட்டேன். அவர் கூறியவை எனக்கு மலைப்பாக இருந்தது. ரூபா 10000ஃ- ஐக் கொடுத்து விட்டேன். சுமார் 6 மாதங்களின் பின் ரூ 10000ஃ- உடன் என்னைக் காண வந்தார். பணத்தை நீட்டினார். “அதற்குள் உங்கள் முதல் திரும்பக் கிடைத்து விட்டதா? என்று கேட்டேன். “ஆம்” என்றார். தொடர்ந்து நீங்கள் தந்த பணத்தில் செத்தல் மிளகாய் வாங்கினேன். கொத்தமல்லி, ஏலம், கராம்பு, சின்னச் சீரகம், பெருஞ்சீரகம் என்று பல வாசனை மூலிகைகளை வாங்கினேன். மிளகாயை நானே இடித்து பொடியாக்கினேன். ஒரு குடும்பத்திற்கு ஒரு கிழமைக்குப் போதுமான முறையில் அவற்றைச் சிறு சிறு பைகளில் அடைத்து ஒரு பொட்டலமாக்கினேன்.
ஒவ்வொரு பொட்டலமும் இருபது ரூபா என்று விலை அமைத்துக் கொண்டேன். பள்ளிக் கூடங்களில் ஆசிரிய ஆசிரியைமார்கள் காலை 10.30 – 11.00 மணிபோல் தமது கூடல் அறைக்கு தேநீர் அருந்த வருவார்கள். அப்பொழுது அங்கு போய் இவற்றை விற்பேன். கிழமைக்கு ஒருதரம் அவர்கள் யாவரும் வாங்குவார்கள். சில அதிபர்கள் “பள்ளிக் கூடத்தின் உள்ளே வரவேண்டாம்” என்றார்கள். அவர்களிடம் போய் என் நிலைமையை எடுத்துக் கூறினேன். என் கணவரையும் இரண்டு பிள்ளைகளையும் குண்டு வீச்சில் ஒரே தடவையில் இழந்த என கதையைச் சொன்னேன். இரங்கி என்னைப் பாடசாலை உள் விட்டார்கள். என்னுடைய முதலை இப்போது என் செலவு போக ஈட்டி விட்டேன். அதுதான் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வந்தேன்” என்றார். உங்கள் டிரளiநௌள ல் அதைப் போடுங்கள் என்று அந்தப் பணத்தை அவரையே வைத்திருக்கச் சொல்லி விட்டேன். மனமிருந்தால் ஆகாததொன்றில்லை என்பதற்கு அந்த அம்மா ஒரு இலக்கணம்.
கல்வி கற்று முடிந்த பல இளைஞர் யுவதிகளும், பட்டதாரிகளும் அரச வேலைகளுக்காக ஏங்கிக் கிடக்கின்றனர். அவர்களும் அரச வேலைகள் கிடைக்கும் வரை இயலுமான பிற முயற்சிகளில் ஈடுபட வேண்டும். வேலைகள் எதுவுமின்றி வெற்றாகப் பொழுதைப் போக்குகின்ற போது தான் சண்டைகள், சச்சரவுகள் உருவாகின்றன. மூத்த பிள்ளைகள் ஏனைய வளரும் பிள்ளைகளுக்கு உதாரணமாக வளர வேண்டும். முயற்சிகளின் பயனை அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இன்று பெயர் பெற்றுள்ள பல பணக்காரர்கள் சிறிது சிறிதாகச் சேர்த்துப் பெரும் பணம் பெற்றவர்கள், அவ்வழியில் வியாபாரங்களை உருவாக்கியவர்கள். இங்கு வருகை தந்திருக்கும் நண்பர் மஸ்தான் அவர்களின் தந்தையார் கூட அப்படித்தான். சிறுகச் சிறுகச் சேமித்து பெரிய வியாபாரங்களை ஏற்படுத்தியவர்.
ஆண்டாங்குளம், முசலி பிரதேசசபை ஆகிய இடங்களில் வேறு வைபவங்கள் இருப்பதால் எனது இச்சிற்றுரையை இந்த அளவில் நிறைவு செய்து இப்பகுதி மக்கள் உழைப்பால் உயர வேண்டும் என்று மனமார வாழ்த்தி விடை பெறுகின்றேன்.
நன்றி. வணக்கம்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com