அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு!

எதிர்வரும் ஜனவரி முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை நூற்றுக்கு 15 வீதம் அதிகரிக்கவுள்ளதாக, உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.  நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதற்கமைய, அலுவலக உதவியாளர்களுக்கான அடிப்படைச் சம்பளம் 23,600 ரூபா வரையும், விஷேட வைத்தியர்களின் அடிப்படைச் சம்பளம் 69,756 ரூபா வரையிலும், சட்டமா அதிபரின் சம்பளம் 110,000 ரூபா வரையிலும் அதிகரிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றுக்காக வருடாந்தம் 12 பில்லியன் ரூபாய் மேலதிக நிதி தேவை எனவும், அமைச்சர் வஜிர அபேவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com