அரச ஊழியர்களினது விடுமுறைகள் ரத்து!

d937f76c180ee566a042568f49f718fd_Lஇயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அனைத்து அரச ஊழியர்களினதும் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், தற்போதைய நிலைமை சீராக்கப்படும் வரையில் விடுமுறை ரத்து அமுலில் இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

நிவாரண சேவைகளை உள்நாட்டலுவல்கள் அமைச்சு சரியான முறையில் வழங்காத பட்சத்தில் 1905 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறையிடலாம் என்றும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய நிவாரண சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com