பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைப்பதற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதனை உறுதிசெய்து 20 ஆயிரம் பேருக்கு விரையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றியிருந்தார். தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் கோரப்பட்ட விண்ணப்ப முடிவுத்திகதி இன்னமும் முடிவுற்றிருக்காத நிலையில் இலங்கை அரசின் உத்தியோகபூர்வ செய்தி இணையத்தளம் ஒருவாரத்தில் 20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக இன்று (25) காலை செய்தி வெளியிட்டிருந்தது.
எனினும் இன்று மாலை தான் வெளியிட்ட “ஒருவாரத்தில் 20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளது” என்ற செய்தியை குறித்த அரச ஊடகம் மீளப்பெற்றுள்ளது. இது குறித்துக் கருத்து வெளியிட்ட வடக்கு மாகாண பட்டதாரிகள் சங்கத்தினர் நியமனத்துக்காக காத்திருக்கும் பட்டதாரிகளை அரச ஊடகம் முட்டள்த்தனமாகக் கையாண்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவோ கோரப்பட்ட விண்ணப்ப முடிவுத்திகதி (08.09.2017) இன்னமும் முடிவுற்றிருக்காத நிலையினை முன்னர் வெளியிட்ட செய்தியில் வாகீசம் சுட்டிக்காட்டியிருந்தது.
குறித்த அரச ஊடகத்தில் வெளியிடப்பட்ட செய்தி இணைக்கப்பட்டுள்ளது.