அரச அதிபர் வந்தால்தான் காணியை விட்டு வெளியேறுவேன் – பிக்கு தொடர்ந்தும் அடாவடி

vakeesam-braking-newsமட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், செங்கலடி – பதுளை வீதியிலுள்ள பன்குடாவெளியில் குருக்கள் ஒருவரிற்குச் சொந்தமான காணிக்குள், புதன்கிழமை (16) காலை வந்ததையடுத்து, அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.

இதனையடுத்து குறித்த பிரதேச தமிழ் மக்கள் வருகைத்தந்ததை அடுத்து நிலமையை கட்டுப்படுத்த பல நடவடிக்கை மேற்கொண்டபோதும், பலனளிக்கவில்லை.
குறித்த தனியார் கணிக்குள் விகாராதிபதி அத்துமீறி நுளைந்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் நிலமையை பொலிஸாருக்கு தெளிவுபடுத்தியதும் உடனடியாக காணியில் இருந்து வெளியேறுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், விகாராதிபதியின் செயல் இன முறுகலை ஏற்படுத்தக்கூடிய விடயமாக உள்ளது என காணியின் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற சட்டத்தையும் மீறி பிக்கு அத்து மீறி நுளைந்துள்ளார், நீதிமன்ற கட்டளையை கையில் வைத்துக் கொண்டு பொலிஸாரும் உரிய நடவடிக்கையை முறையாக மேற்கொள்ளவில்லை என பல அரசியல்வாதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த இடத்தில் பௌத்த மத அடையாளங்கள் காணப்படுவதாகவும் கடந்த காலங்களில் பௌத்த வழிபாட்டுத்தலம் இருந்ததாகவும் கூறி, தனியார் காணிக்குள் அத்துமீறி நுழைந்து அமர்ந்துகொண்டதால் இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன். விகாராதிபதி தொல்பொருள் திணைக்களம் இதற்கான முடிவை நிச்சயம் பெற்றுத்தர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பிரதேசம் சிங்களவர்களுக்கு சொந்தமானது என்றும் அங்கு விகாரை ஒன்றை அமைத்து சிங்கள மக்களை குடியேற்றப்போவதாகவும் கூறிய பிக்கு அங்கிருந்த அரச மரத்தடியின் கீழ் அமர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.
இதற்காக குறித்த பிக்கு வெளி மாவட்டங்களில் இருந்து பல சிங்கள குடும்பங்களையும் வாகனங்களில் அழைத்துவந்து குறித்த இடத்தில் அமரவைத்திருந்தார்.
குறித்த பிக்குவை அங்கிருந்து அகன்று செல்லுமாறு பொலிஸ் அதிகாரி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் அவர்கள் கூறியபோது “நான் இந்த இடத்தில் இருந்து எழும்ப மாட்டேன் அரசாங்க அதிபர் வந்தால் மட்டும்தான் எழும்புவேன் அவரை வரச்சொல்லுங்கள்” என்று பிக்கு கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து உடனடியாக தொலைபேசியுடாக அரசாங்க அதிபரை தொடர்பு கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் அரசாங்க அதிபரை சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்தபோது அரசாங்க அதிபர் அங்கு வரமறுத்ததுடன் பொலிஸாரை கொண்டு பிரச்சினையை தீர்க்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தமிழ் மக்கள் அப்பகுதியில் ஒன்று திரண்டதுடன் குறித்த இடத்திற்கு விஜயம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரனுடன் இணைந்து பௌத்த பிக்குவை பொலிஸாரின் உதவியுடன் அங்கிருந்து அகற்றியுள்ளனர்.
இதேவேளை, இந்த பிரதேசமானது இந்துக் குருக்கள் ஒருவருக்கு சொந்தமானது.
அதில் பல முறை மங்களராமய விகாராதிபதி விகாரை அமைப்பதற்கு முயற்சி செய்த போதும் அதனை நீதிமன்ற ஆணையின் ஊடாக தடுத்து நிறுத்தியதாகவும் ஆனால் குறித்த நீதிமன்ற ஆணையையும் மீறி இன்று மீண்டும் விகாராதிபதி அவர்கள் சிங்கள மக்களுடன் வந்து விகாரை அமைக்க முயற்சி செய்ததாகவும்.
நீதிமன்ற ஆணையை மீறிய பிக்குவை பொலிஸார் கைது செய்யவில்லை என்றும் நல்லாட்சி அரசாங்கம் இதன் பின்னணியில் இருந்து செயற்படுகின்றதா என்ற சந்தேகம் நிலவுவதாகவும் பாராளுமன்ற உறுபப்பினர் வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com