சற்று முன்
Home / செய்திகள் / அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – நாளை சமர்ப்பிக்கிறது ஜேவிபி

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – நாளை சமர்ப்பிக்கிறது ஜேவிபி

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை (21) சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கவுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

“மக்களின் பாதுகாப்புத் தொடர்பில் எவ்வித அக்கறையுமில்லாத இந்த அரசு தொடர்ந்தும் பதவியிலிருக்க வேண்டுமா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை முன்கூட்டியே தடுப்பதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் அரசிடம் இருந்தும்கூட, அரசின் கவனயீனம், அசமந்தப்போக்கு என்பவற்றினால் இந்தத் தாக்குதல் நடைபெற்றுப் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன.

ஆகவே தாக்குதலைத் திட்டமிட்ட பயங்கரவாதிகள் குற்றவாளிகள் என்று கருதப்படும் அதேவேளை, தாக்குதல் குறித்து அறிந்திருந்தும் அதனைத் தடுக்காத அரசும் குற்றவாளியாகவே கருதப்பட வேண்டும்.

எனவேதான் நாடாளுமன்றத்திற்குக் காணப்படும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசைப் பதவியிறக்குவதற்கு இந்த ஒட்டுமொத்த அரசுக்கும் எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளைய தினம் சபாநாயகரிடம் கையளிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்” என்றும் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com