அரசில் பங்கேற்கமாட்டோம் என்றுவிட்டு இன்று குழுக்களின் பிரதித் தலைவர் பதவியை கேட்டு வாக்கிவிட்டனர் – சுரேஸ் காட்டம்

பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் பதவி என்பது ஆழுங்கட்சி அமைச்சர் பதவிஒன்றிற்கு ஈடானது எனக் குறிப்பிட்டுள்ள சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டமைப்பு அமைச்சுக்களையோ பதவிகளையோ நாடாளுமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்போவதில்லையென தெரிவித்துவிட்டு அதற்கொப்பான குழுக்களின் பிரதி தலைவராக நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதனை நியமிக்கமுன்மொழிந்தமை எத்தகையதென கேள்வி எழுப்பியியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று(02) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு கேள்ளிஎழுப்பியுள்ளார்.
கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சுமந்திரன் அவரது பெயரை பிரேரிக்க ஆளும் தரப்பு உறுப்பினரொருவர் ஆமோதிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் தற்போது எதிர்கட்சி ஆசனத்திலிருந்து ஆளும் தரப்பு ஆசனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 
உண்மையில் எந்தவொரு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தெரியாதே தடாலடியாக குழுக்களின் பிரதி தலைவர் நியமனம் நடந்துள்ளது. சுமந்திரன் பிரேரிக்க சிங்கள உறுப்பினரொருவர் ஆமோதித்துள்ளமை ஏற்கனவே திட்டமிட்டு செய்த ஏற்பாடோவென சந்தேகத்தை தோற்றுவிப்பதாகவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழரசுக்கட்சியின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் நடந்து முடிந்தது சர்வதேச விசாரணையெனவும் இனி சர்வதேச விசாரணை பற்றி கதைக்க வேண்டியதில்லையெனவும் தெரிவித்துள்ளார். இது திட்டமிட்டு மக்களினை குழப்பும் நடவடிக்கையாகும். அதே கருத்தினை தான் கட்சி தலைவரான சம்பந்தனும் சொல்லி வருகின்றார்.

உண்மையில் நடந்து விசாரணையின் ஒரு அங்கமே. அடுத்த கட்டமாக அறிக்கை வெளிவந்த பின்னர் அதனை சர்வதேச நீதிமன்றத்திற்கோ அல்லது தீர்ப்பாயத்திற்கோ கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதன் ஊடக நீதி வழங்கப்படவேண்டுமென தெரிவித்த அவர் நடந்து முடிந்தது சர்வதேச விசாரணையென தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளினில் ஈடுபடவேண்டாமெனம் சுரேஸ்பிறேமச்சந்திரன் கோரியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com