சற்று முன்
Home / செய்திகள் / அரசில் இணைந்து அமைச்சுப் பதவியேற்போம் – மக்கள் விருப்பமும் அதுவே என்கிறார் சுமந்திரன் எம்.பி

அரசில் இணைந்து அமைச்சுப் பதவியேற்போம் – மக்கள் விருப்பமும் அதுவே என்கிறார் சுமந்திரன் எம்.பி

எதிர்காலத்தில் அரசியல் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்று அதனூடாக மக்களுக்கு சேவையாற்ற முடியும் என நாம் நினைக்கிறோம். கூட்டமைப்பு அவ்வாறு செயற்படவேண்டும் என்று மக்களும் எதிர்பார்க்கிறார்கள். இது குறித்து கூட்டமைப்பு விரைவில் பரிசீலித்து முடிவெடுக்கவுள்ளது. – இப்படிக் கூறினார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

நேற்றிரவு நேற்றிரவு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த நிகழ்வில் பங்கேற்று கருதது வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது அரசியல் பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை அரசில் இணைந்து அமைச்சுப் பதவிகளை ஏற்பதில்லை எனக் கூட்டமைப்பு ஒரு கொள்கையைக் கொண்டுள்ளது. ஆயினும் அவ்வாறு இருப்பதால் எமது மக்களுக்குச் செய்யவேண்டிய பலவற்றைச் செய்ய முடியாமல் போகின்றது. இதனால் தீர்வு கிடைக்கும்வரை காத்திருக்காமல் எதிர்காலத்தில் அரசியல் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்று மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்றே மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

இதனால் கூட்டமைப்பு இது குறித்து கூடி ஒரு முடிவுக்கு வரும். – என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com