அரசிற்கு எதிராக அணிதிரள மகிந்த மக்களிற்கு அழைப்பு

இலங்கை அரசாங்கம் நாட்டையும், இராணுவ வீரர்களையும் காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்தின் இந்த நவடிக்கைக்கு எதிராக மக்கள் அணி திரள வேண்டும் என கோரியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவையின் ஆணையர், சையத் ராத் அல் ஹுசைனின் இலங்கை விஜயம் தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள தன்னிலை அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழ் மக்களை கொலை செய்தது, அவர்களை சித்தரவதை செய்தது, வடக்கில் திட்டமிட்டே உணவுத் தட்டுப்பாடுகளை ஏற்படுத்தியது ஆகியவற்றை உள்ளடக்கிய மனித உரிமைகள் பேரவையின் “பக்கசார்பான அறிக்கை” இலங்கையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் விசாரணையாளர்களைக் கொண்ட போர்க் குற்ற நீதிமன்றம் அமைப்பதற்கும் ஒப்புதல் வழங்கியுள்ளது என மஹிந்த ராஜபக்ஷ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இரண்டாவதாக, போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இராணுவ வீரர்களை போர்க் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு போதுமான சாட்சிகள் இல்லாமல் போனாலும், அவர்களை துறை ரீதியான நடவடிக்கைள் மூலம் பதவி விலக்குவதற்கும் அரசாங்கம் இணங்கியுள்ளதாக அவர் மேலும தெரிவித்துள்ளார்.
ஜெனீவா பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டதன் மூலம், நாட்டுக்கு எந்த பாதகமும் ஏற்படாது என்று மக்களை நம்ப வைப்பதற்காக அரசாங்கம் சூட்சமமான காரியங்களை கையாண்டுவருவதாக தனது அறிக்கையில் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக சர்வதேச நீதிபதிகளை உள்வாங்கும் விஷயத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் இருவேறு கருத்துக்களை தெரிவித்திருந்தனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com