அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு மலையகம் தொடர்பாக பரிந்துரைக்கப்பட்டு அழுத்தம் கொடுப்பதற்கு நடவடிக்கை

IMG_0380அரசாங்கத்தில் அரசியல் அமைப்பு மாற்றம் தொடர்பில் உருவாக்கப்பட்ட அரசியல் சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு மலையக மக்கள் உரிமைகள் தொடர்பில் சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் மட்டத்தில் பரிந்துரை குழுவிற்கு வாய் மூலமாகவும், எழுத்து மூலமாகவும் பரிந்துரைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் மீள் ஆராய்வு செய்து அவ் யோசனைகளுக்கு மேலதிகமாக கருத்துகளை முன்வைப்பது தொடர்பில் 04.09.2016 அன்று அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் சிவில் அமைப்பு சார்பாக பேராதனை பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசியர் உதயசந்திரன், பிரிடோ நிறுவனத்தின் வெளிகள இணைப்பதிகாரி எஸ்.கே.சந்திரசேகரன் ஆகியோருடன் தொழிற்சங்க மற்றும் அரசியல் ரீதியாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த, பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்ததாவது,

ஒரு சிவில் அமைப்பு இந்த ஒன்றுகூடலை ஏற்பாடு செய்திருந்தாலும், இதில் அரசியல் சம்மந்தப்பட்ட விடயங்கள் உள்வாங்கப்படுவதனால் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பின் மக்கள் பிரதிநிதி மட்டுமல்லாது பாராளுமன்றத்தில் அரசியல்யாப்பில் அமைக்கப்பட்டுள்ள உபகுழுக்களில் ஒருவராக செயல்படுவதனால் நான் இந்த கலந்துரையாடலில் சமூகமளிக்கும் தேவைப்பாடு ஏற்பட்டது.

அரசாங்கத்திற்கு தேவைப்படும் அரசியல் யாப்பு மாற்றத்திற்கான தேவைப்பாடுக்காக அரசியல் யாப்பு சீர்திருத்த ஆணைக்குழு பொது மக்களின் கருத்துகளை கேட்டறிந்தது, இதன்போது மலையகம் தொடர்பில் கருத்துகளை முன்வைத்த சிவில் அமைப்புகள், அரச சார்பற்ற அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் ரீதியான பிரதிநிதிகளும் யோசனைகளும் முன்வைத்துள்ளனர்.

இந்த யோசனைகளுக்கு அமைவாக எதிர்காலத்தில் அரசியல் அமைப்புக்கு மலையக மக்கள் தொடர்பில் மேலதிக வலுவை ஊட்டுவதற்கு ஒரு அரோக்கியமான கலந்துரையாடல் இங்கு முன்னெடுக்கப்பட்டது.

தொகுதிவாரியான தேர்தல் முறை விகிதாசார அடிப்படையிலான தேர்தல் முறை இரண்டையும் கலப்பு முறை தேர்தல் ஒன்றாக மலையக மக்கள் எதிர்நோக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களின் உரிமைகளை எவ்வாறு தக்க வைத்துக்கொள்வது மற்றும் இருக்கும் உள்ளுராட்சி சபைகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பெருக்கத்தை தக்க வைத்துக்கொள்வதும் மற்றும் அதிகரிக்க செய்வதற்குமான பொறி முறை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் ஆலமாக ஆராய்யப்பட்டது என அவர் தெரிவித்தார்.

இங்கு ஆராய்யப்பட்ட விடயங்கள் அனைத்திலும் பாராளுமன்றம் மற்றும் வாத, விவாத கருத்துகளுக்கு அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல நான் கடமைப்பட்டுள்ளனாவேன். இதற்கென என்னை நியமித்துள்ளனர்.

225 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உப குழு ஆகியவற்றிற்கு ஆராய்யப்பட்ட விடயங்களை கொண்டு செல்வதுடன் பொதுவான உடன்பாடு ஒன்றை மலையக மக்களின் எதிர்கால உரிமையை பாதுகாக்கும் வகையில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், அவர் தெரிவித்தார்.

அதேவேளை எல்லை மீள் நிர்ணயம் நடவடிக்கைகளை அரசு கையாண்டு வருவதால் அதன் பூர்த்தியினை தொடர்ந்து உள்ளுராட்சிகளுக்கான தேர்தல்களை நடத்தலாம் ஆனால் எதிர்வரும் காலங்களில் தேர்தல் நிலைமைகளை கருத்திற் கொண்டும் வெகு விரைவில் பாராளுமன்ற வாத, விவாதங்களுக்கு இக்கழுவினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் கொண்டு செல்லப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
vlcsnap-2016-09-04-17h25m24s227

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com