சற்று முன்
Home / செய்திகள் / ”அரசியல் சுயநலன்களுக்காய் இணுவிலை துண்டாட வேண்டாம்” – மௌன ஊர்வலம்

”அரசியல் சுயநலன்களுக்காய் இணுவிலை துண்டாட வேண்டாம்” – மௌன ஊர்வலம்

இணுவில் கிராமத்தின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இனைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று இணுவிலில் மௌனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இணுவில் கிராமம் பாரம்பரியமும் தொண்மையும் மிக்க கிராமம் ஆகும். பரராஜசேகர மன்னன், செகராஜசேகர மன்னகள் ஆட்சி செய்த பிரதேசம் என்றுபோற்றப்படும் இணுவில் கிராமத்தில் அம் மன்னர்களின் பெயரிலாக ஆலயங்கள் இன்று வரலாற்றுப் புகழுடன் திகழ்கின்றன. உலகப் புகழ்பெற்ற மஞ்சம் உள்ளிட்ட பல்வேறு பிரசித்திபெற்ற ஆலயங்களைக் கொண்டுவிழங்குகிறது இணுவில் கிராமம்.

அந்நிலையில் அதமு அரசியல் சுயநலன்களுக்காக எல்லை மீள் நிர்ணயத்தின்போது இணுவில் கிராமத்தின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைத்து தொன்மைமிகு இணுவில் துண்டுபோடும் கைங்கரியம் இணுவிலில் உள்ள சில புத்திஜிவிகளால் திரைமறைவில் செயற்பட்டுவருவதாக இணுவில் கிராம மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டது.

இது தொடர்பில் ஆராயும் மக்கள் ஒன்றுகூடல் ஒன்று நேற்று இணுவில் சிவகாமி அம்மன் மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இணுவிலைத் துண்டாடும் குறித்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் இணுவில் நிலத்தை மிட்பதற்குமான மொள ஊர்வலம் இன்று இணுவில் கந்தசுவாமி கோவில் முன்பாக இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமானது.

குறித் மௌன ஊர்வலம் உடுவில் பிரதேச செயலக அலுவலகத்தை அடைந்து அங்கு உடுவில் பிரதேச செயலரிடம் மனு கையளித்தலுடன் நிறைவுபெற்றது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com