அரசியல் கைதிகள் 17 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரும் போராட்டம் ஒன்று (ஆவணப்படம்)
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 17 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்யவுள்ளதாக, பொலிசார் நீதவான் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றில், இந்தக் குற்றப் பத்திரிகைகளை, சட்ட மா அதிபர் தாக்கல் செய்ய உள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
சம்மந்தப்பட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே, அவர்கள் இதனை நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
அதனை அடுத்து, இந்தக் கைதிகளை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருந்த தமிழ் கைதிகளுக்கு, இது பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பைச் சேர்ந்த அருட்தந்தை எம் சத்திவேல் தெரிவித்தார்.
சிங்கள இனவாதிகளை திருப்திப்படுத்துவதற்காகவே, அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக, அவர் குற்றஞ்சாட்டினார்.
அதேவேளை, போலிசார் தம்மிடம் பெற்றுக்கொண்ட ஒரு குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பயன்படுத்தி, இரண்டு வழக்குகளை தாக்கல் செய்துள்ளதை கண்டித்து, கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் கைதிகள் இரண்டு பேர், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அருட்தந்தை சத்தியவேல் தெரிவித்தார்.
இவர்களது பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்த, தமிழ் அரசியல் கைதிகள் தவறியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுளளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com