சற்று முன்
Home / செய்திகள் / அரசியல் கைதிகள் விடுவிப்புத் தொடர்பில் மகிந்த தரப்பு முனைப்பு

அரசியல் கைதிகள் விடுவிப்புத் தொடர்பில் மகிந்த தரப்பு முனைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் மகிந்த ராஜபக்ச தரப்பிற்கு ஆதரவளிக்கும் பட்டத்தில் முதல் நல்லெண்ண சமிக்ஜையாக அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் பேசப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் ஒரு நடவடிக்கையாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று வெலிக்கடை மற்றும் மகசின் ஆகிய சிறைச்சாலைகளுக்கு சென்று அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் தமிழ் அரசியல் கைதிகள் சிலரின் பெற்றோரும் அங்கு சென்றதாக கூறப்படுகின்றது.

அதன் பின்னராக நாமல் ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனைச் சந்தித்துப் பேசியிருந்தார். இதனையடுத்தே இன்று காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துள்ளார்.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட தரப்பினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முழு ஆதரவினை ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெற்றுக்கொடுப்பதற்கு தொடர்ச்சியான பேச்சுவார்த்தையினை ரணில் விக்கிரமசிங்க தரப்புடன் மேற்கொண்டள்ளதாக தெரியவந்துள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com