சற்று முன்
Home / செய்திகள் / அரசியல் கைதிகள் விடுதலை கோரி மூன்றாவது நாளாகத் தொடரும் நடைப்பயணம்

அரசியல் கைதிகள் விடுதலை கோரி மூன்றாவது நாளாகத் தொடரும் நடைப்பயணம்

அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் நடை பவனி இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கிறது.

அனுராதபுர சிறைச்சாலை மற்றும் கொழும்பு – மகசின் சிறைச்சாலை என்பனவற்றில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் நடைபவனி ஒன்றை ஆரம்பித்தனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த இந்த நடைபவனி அனுராதபுர சிறைச்சாலை நோக்கி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்றுமுன்தினம் காலை ஆரம்பித்த நடைபவனியில் பங்கேற்ற மாணவர்கள், நேற்று முன்தினம் இரவு இயக்கச்சியை வந்தடைந்தனர்.

அங்கு தங்கி விட்டு, நேற்றுக்காலை மீண்டும் நடைபவனியை ஆரம்பித்த மாணவர்கள் கிளிநொச்சியை நேற்று நண்பகல் கடந்து சென்றனர். நேற்றிரவு பனிக்கன்குளம் பிரதேசத்தில் தங்கியிருந்த அவர்கள் இன்று காலை மீண்டும் தமது நடைப்பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

இன்று மாங்குளத்தைத் தாண்டி தமது பயணம் தொடரும் என அறிவித்துள்ள மாணவர்கள் அரசியல் வேறுபாடின்றி அனைவரது ஒத்துளைப்பையும் கோரியுள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com