அரசியல் கைதிகள் உருவாக அரசியல் தலைமைகளே காரணம்.

அரசியல் கைதிகள் உருவாக கடந்த கால அரசியல் தலைமைகளே காரணம். அரசியல் தலைமைகள் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இருந்தால் அரசியல் கைதிகள் உருவாகி இருக்க மாட்டார்கள் என ஜனாதிபதியினால் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டு உள்ளவர் தெரிவித்து உள்ளார்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோரி புகையிரதம் முன்பாக கடந்த நவம்பர் மாதம் 26ம் திகதி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு செந்தூரன் எனும்  மாணவன் தற்கொலை செய்து கொண்டான்.
குறித்த மாணவின் வீட்டிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சராக பதவிவகித்த போது 2006ஆம் ஆண்டு பொலன்னறுவையில் வைத்து அவரை கொலைசெய்ய முயன்றார் என குற்றம் சாட்டப்பட்ட நபரான  சிவராஜா ஜெனிகன் என்பவர் வெள்ளிக்கிழமை மாலை பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர் இன்றைய தினம் சென்று மாணவனுக்கு அஞ்சலி செலுத்தினார்.
மாணவனுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 
கடந்த ஆண்டு 8ம் திகதி நாட்டிற்கு மாற்றம் நடந்தது இந்த 8ம் திகதி என்னுடைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
இந்த நாட்டிலே நான் பிறக்க முதல் இருந்தே, பிரச்சனை இருக்கின்றது.அதனாலையே நாங்கள்  அரசியல் கைதிகளாக இருக்கின்றோம். அதற்கு காரணம் அரசியல் தலைமைகள் தான்.
அவர்கள் அந்த நேரம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இருந்தால் நாம் இந்த நிலையில் இருந்து இருக்க மாட்டோம்.அவர்கள் செய்த தவறே நாம் இவ்வாறு இருக்க காரணம். 
என்னை விடுவித்து போல ஏனையவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்றேன். அத்துடன் இந்த  ஜனாதிபதி காலத்தில் தேசிய பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும். அரசியல் கைதிகளின் பிரச்சனை உட்பட அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com