அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது

அனுராதபுரத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் தற்காலிகமாக தமது போராட்டத்தினை கைவிட்டுள்ளனர்.
உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வந்த அரசியல் கைதிகளுக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் மற்றும் வடபகுதியைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் இடம்பெற்றது. இதன்போதே யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கைக்கு அமைவாக அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப்போராட்டம் தற்காலிகமாக நிறைவுக்கு வந்துள்ளது. அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பில் நேற்றைய தினம் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வட பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இன்றைய தினம் மதியம் 12.30 மணி அளவில் யாழ். பல்கலை மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள், அருட்தந்தை மா.சக்திவேல், அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஆகியோர் சென்று அரசியல் கைதிகளை பார்வையிட்டுள்ளனர்.
இது குறித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அரசியல் கைதிகள் யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடம் கருத்துரைக்கையில்,யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மீதுள்ள நம்பிக்கையின் நிமித்தமும், எமக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் தாம் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், எதிர்வரும் மாதம் 5ஆம் திகதி(05.12.2017) தமது வழக்குத் தவணை உள்ளதாகவும், அதற்கு முன்னர் தமக்கு ஒரு தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவ்வாறு எமது அடுத்த தவணைக்கு முன்னதாக தீர்வு வழங்கப்படாத விடத்து தாம் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக அரசியல் கைதிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாம் முழுமையான நம்பிக்கை வைத்திருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் இன்றைய தினம் அரசியல் கைதிகளுடனான சந்திப்பின்போது, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், அங்கஜன் ராமநாதன், வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், அருட்தந்தை மா.சக்திவேல் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com