அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு யாழில் கைதிகள் தினத்தில் ஆர்ப்பாட்டம்

(பதிவு செய்த நாள் – செப்டம்பர் 12, 2015, 11.25 PM) இலங்கையின் சிறைகளில் விசாரணையின்றி நீண்டகாலமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.
தேசிய சிறைக்கைதிகள் தினத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்திலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொது அமைப்புக்களும், அரசியல் கைதிகளின் குடும்பங்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தன.
யாழ்ப்பாண பேருந்து நிலையத்துக்கு அருகில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், வடக்கு மாகாண அமைச்சர் ஐங்கரநேசன் ஆகியோரும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் சிறைக் கைதிகளின் உறவினர்களுடன் கலந்து கொண்டிருந்தனர்.
‘போரில் ஈடுபட்டிருந்தவர்களை புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய முடியுமானால், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரு பொறிமுறையை ஏற்படுத்த முடியாதா?’, ‘அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாமல் இன நல்லிணக்கம்- தேசிய ஒற்றுமை சாத்தியப்படுமா?’ போன்ற கேள்விகளை அவர்கள் எழுப்பியிருந்தனர்.
‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பலிக்கடாக்களாக அப்பாவி அரசியல் கைதிகள் ஆண்டுகள் பல கடந்தும் சிறைகளில் வாடலாமா?’ என்ற கோஷத்தையும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds