அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி ரயில் முன் பாய்ந்து மாணவன் உயிர்த்தியாகம் !

பாடசாலை மாணவன் ஒருவன் பாடசாலை கொப்பியில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மரண சாசனம் எழுதிவிட்டு, புகையிரதம் முன் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளான்.

குறித்த சம்பவம் யாழ்.கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரி உயர்தர வகுப்புபில் கலப்பிரிவில் கற்றுவரும் இ.செந்தூரன் (வயது18) என்ற கோப்பாய் வடக்கு பகுதியை சேர்ந்த மாணவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளான்.

குறித்த மாணவன் தனது பாடசாலை கொப்பியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரியின் நல்லாட்சி அரசாங்கம் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் புனர்வாழ்வாழித்து விடுதலை செய்ய வேண்டும் எனவும் தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறைகளில் வைத்திருப்பது தனக்கு மனவேதனையைக் கொடுப்பதாவும், கைதிகளின் விடுதலையின் அவசியம் தொடர்பில் தனக்கு புரிந்தஅளவிற்கு கூட இந்த நல்லாட்சி அரசிற்குப் புரியவில்லையே என்றும் எழுதிவைத்துள்ளான்.

அவர்களை உடனே விடுதலை செய்யுங்கள் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை கேட்டு கடிதம் எழுதிவைத்துள்ளதுடன், கடிதத்தில் கீழ் பகுதியில் தமிழீழம் என எழுதி கையொப்பமிட்டுள்ளதுடன், கீழே தனது சுய விபரங்களை எழுதி வைத்துள்ளான்.

இச்சம்பவம் யாழ் குடாநாட்டில் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com