அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தவறில்லை என இடதுசாரிக் கட்சிகளிடையே பொதுக் கருத்து காணப்படுவதாக, பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இடதுசாரிக் கட்சிகள் சில இணைந்து இன்று காலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை றேமகொண்டிருந்தன.
இதன்போது கருத்து வெளியிட்ட போதே வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் அவர்களது நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரிவினை குறித்த கருத்தை கைவிட்டமை மகிழ்ச்சியளிப்பதாகவும் எனினும் அவர்கள் தேசிய ஐக்கியத்திற்கு அத்தியவாரம் இடத் தயாராக உள்ளனரா என்ற கேள்வி எழுவதாகவும் வாசுதேவ நாணயக்கார மேலும் கூறியுள்ளார்.