சற்று முன்
Home / செய்திகள் / அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம்

நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக நேற்று பிற்பகல் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இதன் போது அரசியற் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டதுடன், ‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் தமிழர்களைக் கொல்லாதே’ ‘சகாதேவனின் மரணத்திற்கு நீதி வேண்டும்’ என்று போராட்டக்காரர்களினால் கோஷங்களும் எழுப்பப்பட்டன.

இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரான செல்வராசா கஜேந்திரன், கட்சியின் சட்ட ஆலோசகரான சட்டத்தரணி சுகாஷ், கட்சியின் மகளிர் அணித் தலைவி உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com