சற்று முன்
Home / செய்திகள் / அரசியல் கைதிகளின் விடுதலை கோரி அனுராதபுரம் சிறைநோக்கிய நடைபவனி ஆரம்பம்

அரசியல் கைதிகளின் விடுதலை கோரி அனுராதபுரம் சிறைநோக்கிய நடைபவனி ஆரம்பம்

சிறைச்சாலைகளில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுமாறும், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கான அரசியல் தீர்மானம் ஒன்றை அரசு எடுக்க வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் சிறைச்சாலை வரை நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படும் குறித்த நடைபவனி இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமாகியது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றுத் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் முடிவிலேயே நடைபவனிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக இன்று செவ்வாய்க்கிழமை காலை பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பமாகிய நடைபவனி கிளிநொச்சி – வவுனியா ஊடாக அநுராதபுரம் சிறைச்சாலையை சென்றடையவுள்ளது.

இதேவேளை குறித்த நடைபவனியில் பெதுமக்களை பெருமளவில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com