அரசியல் கைதிகளின் பொது மன்னிப்பை நிராகரித்தார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

தற்காலத்தில் உலக அரசாங்கங்கள் பொது மன்னிப்பு வழங்குவதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சிரியாவில் அவ்வாறே தான் பொது மன்னிப்பு வழங்குவது தவறு கூறியதாகவும் தெரிவித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் (Zeid Ra’ad Al Hussein) பொது மன்னிபிலும் பார்க்க வழக்குகளை விசாரித்து கூடியவிரையில் அவர்களை விடுதலை செய்வதுதான்  முறை என்று தன்னிடம் குறிப்பிட்டதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் இன்று (07.01.2016) யாழ்ப்பணத்தில் வடக்கு மாகாண முதலமைச்சரைச் சந்தித்து உரையாடியிருந்தார். அதன்போதே ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கைதிகள் விடையத்தில் தன்னிடம் இவ்வாறு தெரிவித்ததாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்றைய சந்திப்புக் குறித்து மேலும் தெரிவித்த வடக்கு முதலமைச்சர்,


அவர் கடந்த ஆண்டு இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எவ்வா நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது என்பது தொடர்பாக அறிந்து கொள்வதற்காக வந்திருந்தார். தான் இங்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களுடைய பிரச்சனைகளை நேரில் அறியவே வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அவர் காணாமல்போனோர் தொடர்பாகவும், சிறையில் உள்ளவர்கள் தொடர்பாகவும், காணிகளை இழந்தவர்கள் தொடர்பாகவும் பலலைச் சந்திக்க அவர் நடவடிக்கை எடுத்திருந்தார். அவருடின் வந்த அவலுவலர் அந்த பிரதிதிகளுடன் சந்திப்பை மேற்கொண்டபோது இவர் எம்மோடு உரையாடினார். 

மக்கள் சம்மந்தமாக பலவிதமான பிரச்சினைகளை அவரிற்கு எடுத்துக்கூறினோம். அவற்றை அவர் தெரிந்துகொண்டார். கடந்த வருடம் அவரால் தரப்பட்ட அறிக்கை எமக்கு சாதகமாக அமைந்திருந்தது என்பது எல்லோரும் அறிந்த விடையம்.

அவர் குறிப்பிட்ட ஒரு விடையத்தை சிறையில் வாடும் எங்கள் பிள்ளைகளிற்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது. தற்காலத்தில் உலக அரசாங்கங்கள் பொது மன்னிப்பு வழங்குவதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சிரியாவில் அவ்வாறே தான் பொது மன்னிப்பு வழங்குவது தவறு என கூறியதையும் எடுத்துக்கூறினார். பொது மன்னிபிலும் பார்க்க வழக்குகளை விசாரித்து கூடியவிரையில் அவர்களை விடுதலை செய்வதுதான்  முறை என்று அவர் குறிப்பிட்டார். 
ஆணையாளரின் வருகையினூடு தங்கள் விடுதலை குறித்த எதிர்பார்ப்பு சிறையிலுள்ள இளைஞர்களிற்கு இருந்தது எமக்குத் தெரியும். அந்த எதிர்ப்பார்ப்பை ஐ.நா ஆணையாளர் கைதிகளிற்கு சாதகமானப் பார்த்ததாக தெரியவில்லை. 

நீங்கள் இவ்வாறான மனோ நிலையில் இருந்தால் அரசிற்கு தெரியப்படுத்தி விவைாக வழக்குகளை முடியுங்கள் என்று நான் அவருக்குக் கூறினேன் என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com