அரசியல் குழப்பம் – மகா நாயக்கர்களைச் சந்திக்கிறார் ஜனாதிபதி


புதிய அரசியலமைப்பு மற்றும் அரசியமைப்புச் சீர்த்திருத்தம் உள்ளிட்ட சில முக்கிய விடயங்களுக்கு மகா நாயக்க தேரர்கள் திடீர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதனால் நாட்டில் அரசியலமைப்பு முன்னகர்வுகளில் குழப்ப நிலைகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவை தொடர்பில் மகா நாயாகக்கர்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மகா நாயக்க தேரர்களை கண்டியில் சந்திக்க உள்ளார். இன்று மாலை இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் கலந்து கொள்ள உள்ளனர். இதன்போது பௌத்த மதம் மற்றும் பௌத்த விகாரைகள் சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் பேசப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com