அரசியல் காழ்ப்புணற்சியில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஈபிடிபியை விமர்சிக்கிறார் – றெமீடியஸ் குற்றச்சாட்டு

பிள்ளைகள் , பேரப்பிள்ளைகளை சிங்கள பௌத்த கலாச்சாரத்திற்கு தாரைவார்த்துக் கொடுத்து விட்டு 70 வயதில் வந்து சிலர் தமிழ் தேசியத்தை எங்களுக்கு கற்று கொடுக்க முனைகிறார்கள். நாங்கள் 13 வயதில் இருந்தே தமிழ் தேசியத்திற்காக செயற்படுகின்றோம் என வடக்கு மாகாண முதலமைச்சரை கடுமையாகச் சாடியிருக்கும்
ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் முடியப்பு ரெமிடீயஸ் உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு ஈபிடிபி ஆதரவு வழங்கியதன் காழ்ப்புணற்றியில் அவர் பேசுவதாகவும் குறிப்பிட்டுள்ளர்.

இன்று (03.03.2018) யாழ் ஊடக அமைத்தில் ஊடக சந்திப்பினை மேற்கொண்ட றெமீடியஸ்,

“யாழ் மாநகரசபையில் ஈபிடிபி கடந்த முறை ஆட்சி செய்தபோது ஊழல்களை மேற்கொண்டதாகவும் அவை விசாரிக்கப்படவேண்டும் எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் கூறுகின்றார். இது தொடர்பில் முன்னர் அவரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குற்றச்சாட்டு எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

தற்போது எம்மைப்பற்றிப் பேசும் அவர் தனது ஆட்சியில் ஊழல் குற்றஞ்சாட்டப்பட்டு பதவி நீக்கப்பட்ட 03 அமைச்சர்கள் மீது சட்டரீதியாக என்ன நடவடிக்கை மேற்கொண்டார். பதவி நீக்கப்பட்டால் குற்றச்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டதாகிவிடுமா?

70 வயதுக்கு மேற்பட்டவர்களின் கருத்தை கணக்கில் எடுக்கத் தேவையில்லைத்தான். முதலமைச்சர் தனது வயது நிலை காரணமாக இப்படிக் கதைக்கிறார்.

தூர்ந்த கிணறுகள் திருத்தல் விடயத்தில் முதலமைச்சரும் முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசனும் இணைந்து ஊழல் புரிந்ததாகவே கூறப்படுகின்றது. குறித்த கிணறு திருத்தல் கொடுக்கல்வாங்கல்களில் காசோலைகள் வேறு நபர்களின் பெயர்கள் ஊடாக கைமாற்றப்பட்டுள்ளன. இதில் கொமிசன்கள் வைக்கப்பட்டிருக்கலாம்.

வலி வடக்கில் திருத்தப்பட்தாகக் கூறப்படும் கிணறுகள் பலவற்றை அடையாளப்படுத்த முடியவில்லை. வடிவேலு கிணறுதேடியது போல அதிகாரிகள் அங்கு கிணறு தேடியிருக்கிறார்கள்.” முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சமுன் முதலமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்தபோது முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு தேசியம் எங்கு சென்றது ? – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com