அரசியல் அறிவுபூர்வமான கலந்துரையாடல் தளத்தை அரசியல் காழ்ப்புணர்வத் தளமாக்கினார் சுமந்திரன் – அரங்கில் குழப்பம்

vakeesam-braking-newsயாழில்  சனிக்கிழமை இடம்பெற்ற மூத்த அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு எழுதிய “இலங்கை அரசியல் யாப்பு” நூலின் வெளீயீடு குழப்பங்களுடன முடிவுக்கு வந்திருந்தது. நூல் வெளியீட்டுடன் புவிசார் அரசியல் கைதிகளாய் உள்ள ஈழத் தமிழர்கள் பற்றிய ஒரு திறந்த கலந்துரையாடலும் நிகழ்வு மூத்த பேராசிரியர் க. சிற்றம்பலம் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வினை ஓர் அரசியல் அறிவுபூர்வமான கலந்துரையாடல் தளமாக நகர்த்திச்செல்லுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரும் அரசியல் ஆய்வாளருமான நிலாந்தன் அவர்கள் தனது உரையில் வலியுறுத்தியிருந்தார்.

எனினும் நிலாந்தனது வேண்டுகோளினை ஏற்றுக்கொள்வதாக தனது உரையினைத் தொடர்ந்த  கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றிய மேடையினை அரசியல் அறிவுபூர்வமான கலந்துரையாடலாக பயன்படுத்தாது அதசியல் காழ்ப்புணர்வின் வஞசம் தீர்க்கும் களமாகப் பயன்படுத்தினார்.

எழுகதமிழயும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிணையும் மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினையும் கடுமையாக விமர்சிப்பதாக அவரது உரை அமைந்திருந்தது. ஒரு கட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கநட்த கால தேர்தல் தோல்விகளைச் சுட்டிக்காட்டிய சுமந்திரன் சுந்திரக் கட்சியின் அங்கஜன் இராமநாதன் ஐ.தே.க வின் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் இவர்களை விட கூடுதலான வாக்குப்பெறார்கள் இது கேவலமான செயல் என….. அவரது உரை தொடர்ந்துகொண்டு சென்றது.

ஒருகட்டத்தில் சுமந்திரனது உரையினால் ஆத்திரமடைந்த  பார்வையாளர்கள் சுமந்திரனை நோக்கி தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பியதுடன் சுமந்திரன்  துரோகி  என கோசங்களையும் எழுப்பினர். அதன்போது தலையிட்ட நிகழ்வின் தலைவரும் தமிழரசுக் கட்சி முக்கியஸ்தரும் மூத்த பேராசிரியருமான க.சிற்றம்பலம் நிகழ்விற்கு அப்பால் சென்று தேவையற்றவற்றைக் கதைப்பதால் தான் மக்கள் குழப்பமடைகிறார்கள் அவ்வாறு கதைப்பதை தவிருங்கள் என சுமந்திரனை நோக்கிக்கூறினார்.

அதன்போது குறுக்கிட்ட சுமந்திரன்நான்  எதைக் கூறவந்தேனோ அதைக் கூறியே செல்வேன் நீங்கள் தலமைதாங்குவதானால் சரியாக தலமைதாங்க வேண்டும். கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். என்னைப் பேசாதே எனக் கூறமுடியாது எனக் கூறினார்.

இதனிடையே தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி உரையாற்றுகையில் முரண்பாடு பார்வையாளர்களிடையே உச்சம் பெற்றிருந்தது. பரஸ்பரம் சண்டைக்கு தயாராகுவதாக ஆனந்தசங்கரி சவாலும் விடுத்திருந்தார்;

சுமந்திரனுக்கு முன்னதாக உரைநிழ்த்திய வம மாகாண எதிர்க்கட்சித்தலைவர் தவராசா திருநாவுக்கரசுவின் நூல் முழுக்க முழுக்க சிங்களவர்களைக் குற்றஞசாட்டுவதாகவே இருக்கிறது. இது தனக்கு உடன்படில்லை எனவும் சிங்களவர்கள் தமிழர்களோடு இணக்கமாக வாழந்த காலகட்டங்களும் உள்ளன என உரையாற்றினார். அதன்போதும் சபையில் சலசலப்பு ஏற்பட்டதோடு ஒட்டுக்குழு உறுப்பினரைன நீங்கள் எமக்கு  அரசியல் பற்றி படிப்பிக்க வேண்டாம் என கூச்சலிட்டனர்.

இத்தகைய குழப்பங்களால் நிகழ்வின் பார்வையாளர்கள் பெரும்பாலும் வெளியேற மிக குறைவானவர்களுடனேயே நூல் வெளியீடு நடந்திருந்தது.

அங்கு உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் பொ.கஜேந்திரகுமார் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவிற்கோ, மேற்கிற்கோ, சீனாவிற்கோ அடிபணிவதற்குத் தயாராகவிருக்கவில்லை. அந்த வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளை அடிபணிய வைப்பதற்காகவே கடந்த காலப் போரையே நடாத்தினார்கள்.

பூகோளப் போட்டி நடைபெறுகின்ற ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழருக்காகப் பேரம் பேசும் ஒரேயொரு தரப்பாகவிருந்த நிலையில் முதற்கட்டமாக அந்த அமைப்பை அழிக்க வேண்டும். அந்த அமைப்பை அழிப்பதன் ஊடாக மக்களை அடிபணிய வைத்து அந்த அழிவிற்குப் பின்னாலிருக்கக் கூடிய அரசியல் தலைவர்களை எடுபிடிகளாகப் பாவிப்பதற்கானதொரு சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்குத் தான் அன்றைய காலகட்டத்தில் காய்கள் நகர்த்தப்பட்டன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.

இந்த நிகழ்வில் அரசியல் ஆய்வாளர் எஸ்.நிலாந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும், மூத்த அரசியல் வாதியுமான வீ. ஆனந்தசங்கரி, வடமாகாண சபை உறுப்பினர்களான திருமதி அனந்தி சசிதரன், எஸ்.சிவநேசன், வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராஜா, மூத்த ஊடகவியலாளர் வ.தேவராஜா, ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com