அரசியல்வாதிகளில் எமக்கு நம்பிக்கை இல்லை ஊடகவியலாளர்களே சமாதானத்திற்காகாக போராட வேண்டும் “மதக வன்னிய” நூல் வெளியீட்டில் கவிஞர் கருணாகரன்

கவிஞரும் எழுத்தாளருமாகிய சி.கருணாகரன் எழுதிய “இப்படி ஒரு காலம்” நூல் கொழும்பு பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவி அனுஷா சிவலிங்கத்தினால்  சிங்கள மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு මතක වන්නිය “மதக வன்னிய” (வன்னியின் நினைவுகள்) எனும் பெயரில் கொழும்பு தேசிய நூலகத்தில் இன்று (10/01/2017) வெளியிட்டு வைக்கப்பட்டது.

அங்கு உரையாற்றிய கருணாகரன் யுத்தம் ஆக்கத்தை தர வில்லை. அழியையே தந்தது. யுத்தம் இந்த நாட்டை இரத்தாலும் கண்ணீராலுமே தோய்த்துவிட்டது என்று குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நான் யுத்தத்தின் சாட் சியாக இருக்கின்றேன். நாங்கள் பொருத்தமில்லாத தலைவர்களால் ஆழப்பட்டிருக்கின்றோம். ஒருவரை ஒருவர் அன்பு செலுத்தாமல் கொல்லப்பட்டிருக்கிகிறோம். இந்த தலைமுறை யுத்தம் எமக்கு ஒரு பாடம். இது இத்தோடு முடியட்டும். யப்பானை சிதைத் அமெரிக்காவோடு யப்பான் இன்று நட்பாக உள்ளது. ஏன் எங்களால் முடியாது. உலகெங்கும் யுத்தம் வேண்டாம் என மன்றாடுகிறேன். அரசியல்வாதிகள் இன்றும் எமக்கு நம்பிக்கையானவர்களாக இல்லை . ஊடகவியலாளர்கள் தான் இதனை மாற்றவேண்டும். ஊடகவியலாளர்களே சமாதானத்திற்காகாக போராட வேண்டும் படைப்பாளியின் குரலாக நான் இதை முன்வைக்கிறேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com