அரசியலமைப்பில் பௌத்தம் ஒருபோதும் முன்னுரிமையை இழக்காது! -ரணில்

புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட், பௌத்தத்திற்கு முன்னுரிமை ஆகிய ஆகிய விடயங்களுக்கு எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையென சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று இளம் பௌத்த பிக்குகளின் குழுவொன்றைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இதன்போது அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“அரசியலமைப்பில் பௌத்தம் ஒருபோதும் முன்னுரிமையை இழக்காது.  ஒற்றையாட்சி முறையிலும் மாற்றம் செய்யப்படாது.

நாட்டின் ஒற்றையாட்சி முறைக்கோ, பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்குவதற்கோ எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

பௌத்தத்துக்கான முன்னுரிமையைப் பாதுகாக்கும் அரசாங்கம், ஏனைய மதங்களுக்கான சம உரிமையையும் உறுதிப்படுத்தும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com