சற்று முன்
Home / செய்திகள் / அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த யோசனை ஜே.வி.பியால் சமர்ப்பிப்பு !

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த யோசனை ஜே.வி.பியால் சமர்ப்பிப்பு !

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் உள்ளிட்ட திருத்தங்கள் அடங்கிய, அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தை ஜே.வி.பிஇ இன்று (25) கையளித்துள்ளது.

தனிநபர் பிரேரணையாகவே, ஜே.வி.பியின் தலைவரும், எதிர்க் கட்சி முதற்கோலாசானுமாகிய அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக திஸாநாயக்கவிடம் கையளித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக, இதற்கு முன்னர் ஆட்சிபீடமேறிய சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகிய முன்னாள் ஜனாதிபதிகள் இருவரும், 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதியன்று ஆட்சிபீடமேறிய தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், உறுதியளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com