அரசின் பங்காளியாகுமா தமிழரசு ? புதிய கூட்டணி குறித்து இரகசியப் பேச்சு !!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்திலிருந்து விலகினால், எதிர்க்கட்சி உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு, புதிய கூட்டாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு இரகசியப் பேச்சுவார்த்தைககள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் கூட்டாட்சிக்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலரை இணைத்து இந்த புதிய கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. தற்போதைய கூட்டணியிலிருந்து ஆகஸ்ட்டுடன் வெளியேறப்போவதாக ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் உள்ளிட்ட 18 பேர் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில் அவ்வாறானதொரு நெருக்கடி ஏற்பட்டால் புதிய கூட்டணி ஒன்றினை அமைப்பது குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

பிரதம் மற்றும் ஜனாதிபதியின் புதிய அரசியலமைப்பு உருவாக்க நகர்வுகளைக் குழப்பும்வகையில் அரசாங்கத்தில் இருக்கின்ற சிலர், உடனடியாக அரசாங்கத்தை விட்டு வெளியேறினால், நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்டம் காணவிடாது, ஆட்சியைக் கொண்டுசெல்வதற்கு தேவையான, பெரும்பான்மையைக் கவனத்தில் கொண்டே, மேற்படி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது.

இது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் இணைந்து மேற்கொண்டுவருவதாக தெரியவருகின்றது.

இக் கூட்டணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எதிர்ப்பு வெளியிடும் நிலை உருவானால் தமிழரசுக் கட்சி தனித்து ஆதரவளிப்பது என்ற நிலைப்பாட்டை எடுக்கும் எனவும் தெரியவருகின்றது.

இதேவேளை ஆதரவளிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு முக்கிய அமைச்சுப் பதவிகள் சிலவற்றை வழங்குவது குறித்தும் ஆராயப்பட்டுவருவதாக தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com