அரசாங்கம் உருவாக்கிய மக்கள் கலந்தாய்வு பொறிமுறைகள் யாவும் சர்வதேச ஏமாற்று நிகழ்ச்சிநிரல்களே – சிவில் சமூக அமையம்

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

பொறுப்புக்கூறல் பொறிமுறையிலும்சரி அரசியல் அமைப்பு உருவாக்கத்திலும் சரி மக்கள் கலந்தாய்வுகளைப் புறந்தள்ள அரசு தன்னிச்சையான முடிவுகளையே மேற்கொண்டுவரவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள சிவில் சமூக அமையத்தினர் பொறுப்புக்கூறல் விடையத்திற்கு எனவும் அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்கு எனவும் உருவாக்கப்பட்ட மக்கள் கலந்தாய்வுப் பொறிமுறைகள் ஐ.நா உள்ளிட்ட சர்வதேசத்தினை ஏமாற்றுவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சிநிரலே எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் 06.10.2016 அன்று சிவில் சமூக அமைத்தின் இணைப் பேச்சார்களான கு.குருபரன் மற்றும் எழில் ராஜன் ஆகியோர் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாடியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்,

எழுக தமிழ் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்கள் எழுகதமிழில் முன்வைக்கப்பட்ட பிரகடனத்திற்கும் தமிழ்க் கூட்டமைப்பின் தேர்தல் கால பிரகடனங்களிற்கும் பெரிதாக வேறுபாடு இருந்திருக்கவில்லை எனவும் தமிழரசுக் கட்சியினர் எழுகதமிழ் இடம்பெற்ற கால சூழல் சரியானதல்ல என கூறுவதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தனர்.

இக் காலகட்டத்திலேனும்  ஏழுக தமிழ் போராட்டத்தினை நடத்தாது விட்டால் எப்போது நடாத்துவது எனக் கேள்வி எழுப்பிய அவர்கள் தீர்வு உள்ளிட்ட விடையங்களிலும் சரி பொறுப்புக்கூறல் விடையத்திலும் சரி அரசாங்கம் தனது நிலைப்பாடுகளை தொடர்ச்சியாக வெளிப்படுத்திவரும் நிலையில் எமது தரப்பான பிரதிநிதிகள் தொடர்ந்தும் மௌனமாய் இருக்கும் நிலையிலேயே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாதிக்கப்பட்ட  நிலையில் பல்வேறு தரப்பாய் போராட்டங்களை நடாத்திய மக்கள் ஒன்றாய் இணைந்து எழுக தமிழில் சங்கமித்ததாகவும் அது காலத்தின் தேவை எனவும் குறிப்பிட்டனர்.

எழுக தமிழை முன்வைத்து அரசியல் பிழைப்புவாதம் செய்பவர்கள் குறித்தும் அல்ட்டிக்கொள்ளத் தேவைலயில்லை எனக் குறிப்பிட்ட அவர்கள் தெற்கில் முற்போக்குவாதிகளாகவும் மனித உரிமைகள் ஆர்வலர்களாகவும் இதுவரை தம்மை காட்டிவந்த நிமல்கா பெர்னாண்டோ உள்ளிட்டவர்கள் பொதுபல சேனா போன்றவற்றிற்கு இணையாக கூச்சலிடுவது வேதனையளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com