அரசாங்கத்தின் அபிவிருத்தி பணிகளுக்கு எவரும் தடைஏற்படுத்தக்கூடாது – எதிர்க்கட்சித் தலைவர்

sampanthan-mpஅரசாங்கத்தின் அபிவிருத்தி பணிகளுக்கு எவரும் தடைஏற்படுத்தக்கூடாது என்று தெரிவித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் பிளவுபடாத நாட்டில் அனைத்துமக்களும் இலங்கையர்களாக வாழ்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

வரவு செலவுத்திட்டத்தின் 5ம் நாள் விவாதாம் இன்று (17) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இன்றைய பாராளுமன்ற விவாதத்தை எதிர்க்கட்சி தலைவர் ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்.

உரையாற்றிய அவர்  அவர் அரசசேவையை வளப்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். பட்டதாரிகளுக்கு தொழில்களை வழங்குவதற்கு முறையான வேலைத்திட்டம் அமுல்ப்படுத்தப்பட வேண்டும். உள்நாட்டில் உற்பத்திசெய்யக்கூடிய உணவுப்பொருட்களின் உற்பத்தியை கட்டுப்படுத்துவது அவசியமாகும். சகல இனத்தவர்களுக்கும் நீதி நிலைநாட்டப்படுவது முக்கியமானதாகும் . வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள் பற்றி அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்  என்று தெரிவித்த அவர் வடக்கு கிழக்கு மாகாணங்கள் பற்றிய முழுமையான அபிவிருத்தி திட்டங்களையும் அரசாங்கம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com