சற்று முன்
Home / செய்திகள் / அம்பிட்டிய சுமண தேரருக்கு பிணை – ஜனவரி 25ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக பணிப்பு

அம்பிட்டிய சுமண தேரருக்கு பிணை – ஜனவரி 25ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக பணிப்பு

மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாதாதிபதியும் கிழக்கு மாகாண பிரதி சங்கநாயக்கருமான அம்பிட்டியே சுமணரத்ன தேரரை 50ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் மீண்டும் ஜனவரி 25ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

பொதுபல சேனவின் வருகை தொடர்பாக மட்டக்களப்பு நகரில் கடந்த 03ஆம் திகதி பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

பொதுபல சேனவின் வருகை தடுக்கப்பட்டதை அடுத்து, நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட தடை உத்தரவை மீறி மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரரால் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேரரின் ஆர்ப்பாட்டத்துக்கு மட்டக்களப்பு நகரில் பொதுமக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பொதுமக்களை பிரதான வீதியில் ஒன்றுதிரட்டி சமாதானத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் கலகத்தை உருவாக்குவதற்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் இவர் மீது மட்டக்களப்பு பொலிஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இதன்படி இன்று தேரர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com