அம்பாறையில் விவசாயிகள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்!

அம்பாறை, இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வாங்காமம் நாவலடிவட்டை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்பைக் கண்டித்து, விவசாயிகள் இன்று (05) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இறக்காமம் பிரதேச செயலக பிரிவுக்கும் தமண பிரதேச செயலக பிரிவுக்குமிடையில் ஏற்பட்டுள்ள எல்லை நிர்ணயம் காரணமாக கடந்த 3 வருடங்களாக எங்களது காணிகளுக்குச் சென்று வேளாண்மை செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள வேளையில், சகோரத இனத்தவர்கள், எங்களது காணியில் தற்போது சட்டவிரோதமாக பெரும்போக வேளாண்மை செய்கையில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் எங்களது காணி கிடைக்காமல் போய்விடுமென அச்சமடைந்துள்ளோமென, விவசாயிகள் தெரிவித்தனர்.

“கடந்த 35 வருடங்களுக்கு முன்னர் வேளாண்மை செய்கையில் ஈடுபட்டு வந்த எங்களுக்கு 1989ஆம் ஆண்டு அம்பாறை அரசாங்க அதிபரால் அதற்கான சட்டபூர்வமாண ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளது” எனவும் வியசாயிகள் தெரிவித்தனர்.

அத்துடன், “எங்களுக்குச் சொந்தமான சுமார் 99 ஏக்கர் ஹெக்டேயர் காணி அபகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இதனை நம்பி வாழ்ந்த சுமார் 80 குடும்பங்கள் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். இது தொடர்பாக நீதிமன்ற செல்லவுள்ளோம்” என விவசாயக் குழுவின் தலைவர் யூ.எல். உவைஸ் தெரிவித்தார்.

“அத்துமீறி வேளாணமை செய்வது தொடர்பாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் தமண மற்றும் இறக்காமப் பிரதேச செயலாளர்கள், இலங்கை மனத உரிமைகள் ஆணைக்குழு என்பவற்றுக்கு முறைப்பாடு செய்துள்ளோம்.

“இது தொடர்பாக எங்களுக்கு எவ்விதமான தீர்வும் எட்டாத நிலையில் திடீரென எமது காணியில் அத்துமீறி வேளாண்மை செய்யப்பட்டுள்ளமை எங்களை மிகவும் அச்சத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

“எனவே, எங்களது காணிகளை எங்களுக்கு வழங்குவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்” என, விவசாயக் குழுவின் தலைவர் யூ.எல். உவைஸ் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com