அம்பலகாமத்தில் ஆட்லறிகள் மீட்பு

முல்லைத்தீவு – அம்பகாமம் காட்டுக்குள் இருந்து இன்று காலை புலிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் ஆட்லறி செல்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

விமானப் படையினரால் குறித்த ஆட்லறி செல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, குண்டு செயலிழக்கும் பிரிவினருக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக, விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு எறிகணையும் 16 கிலோ கிராம் கொண்டது என்றும் விமானப் படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த அம்பகாமம் காட்டுப் பகுதிக்கு அருகில்தான் 2009 ஆண்டுக்கு முன் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானப் படைத்தளம் காணப்படுகிறது.

தற்போது அது இலங்கை விமானப் படையினரின் பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com