அமைச்சு பதவி கிடைத்ததென்று தலைக்கணம் பிடித்து இருக்காது மக்களுக்கு சேவையாற்றுங்கள் – அமைச்சர் திகாம்பரம்

photo (9)அமைச்சு பதவி கிடைத்ததென்று தலைக்கணம் பிடித்து இருக்கக்கூடாது அதனை வைத்துக்கொண்டு சிறந்த சேவையினை மக்களுக்காற்ற வேண்டும். ஒரு காலத்தில் எமது தலைவர்கள் எவரையும் மதிப்பதில்லை. யார் பேச்சுனையும் கேட்பதில்லை.

எனவே தான் மலையகத்தின் அபிவிருத்தி பின்னடைந்து இன்று நான் வீடமைப்பு திட்டத்தினை மிகவும் ஆழமாக போட்டுள்ளேன்.

மக்கள் முன்பு போன்று தகரம் வேண்டும், சீமெந்து வேண்டும் என்று கேட்காமல் தற்போது வீடு வேண்டும் என்று கேட்கின்றார்கள் என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

பாலர் பாடசாலை மாணவர்களின் பரிசளிப்பு விழா அட்டன் பிரின்ஸ் மண்டபத்தில் 26.08.2016 அன்று நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் மாணவர்களுக்கு பதக்கங்களும், பரிசில்களும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பிரிடோ நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஆர். ஜோக்கீம், அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்பள்ளி கல்வியை மேம்படுத்துவதற்கும், பெருந்தோட்ட பகுதிகளில் இயங்கும் முன்பள்ளிகளுக்கு பௌதீக வளங்களை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று மாணவர்களின் கல்வி வளர்ச்சியை பார்க்கும் பொழுது பாரிய முன்னேற்றம் கண்டுள்ளது. இதற்கு காரணம் தோட்டப்புறங்களில் இயங்குகின்ற முன்பள்ளியாகும் என்றார்.photo (5) photo (6)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com