அமைச்சின் முன்­அ­னு­மதி இன்றி நிகழ்வுகளை ஒழுங்கு செய்ய வேண்டாம்!

தேசிய ஒருங்­கி­ணைப்பு நல்­லி­ணக்க அமைச்­சினால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் அபி­வி­ருத்தி வேலை­களை ஆரம்­பித்தல் மற்றும் கைய­ளித்தல் ஆகிய வைப­வங்­களை இந்த அமைச்சின் முன்­அ­னு­மதி இன்றி ஒழுங்கு செய்ய வேண்டாம் என்று மேற்­படி அமைச்சின் செய­லாளர் வி. சிவ­ஞா­ன­சோதி அறி­வு­றுத்தல் அனுப்­பி­யுள்ளார்.

யாழ். மாவட்டச் செய­லாளர் என். வேத­நா­யகன், கிளி­நொச்சி செய­லாளர் எஸ். அரு­மை­நா­யகம், முல்­லைத்­தீவு செய­லாளர் திருமதி. ஆர். கேதீஸ்­வரன், மன்னார் செய­லாளர் எம்.வை.எஸ்.தேசப்­பி­ரிய, வவு­னியா செய­லாளர் எம்.பி. ஆர். புஸ்­ப­கு­மார, அம்­பாறை செய­லாளர் ரி.பி வணி­க­சிங்க, திரு­கோ­ண­மலை செய­லாளர் ஆர்.ஏ.ஏ புஷ்­ப­கு­மார மற்றும் மட்­டக்­க­ளப்பு மாவட்ட செய­லா­ளர்­க­ளுக்கு இவ்­வ­றி­வித்தல் சம்­பந்­த­மான கடி­தங்கள் அனுப்­பப்­பட்­டுள்­ளன.

இந்தக் கடி­தத்தின் பிர­திகள் ஜனா­தி­ப­தியின் செய­லாளர் ஒஸ்ரின் பெர்­னாண்டோ, பிர­த­மரின் செய­லாளர் சமன் ஏக்­க­நா­யக்க, உயர் கல்வி நெடுஞ்­சா­லைகள் அமைச்சின் செய­லாளர் டி.சி. திஸா­நா­யக்க, வீட­மைப்பு நிர்­மாண அமைச்சின் செய­லாளர் டபிள்யூ.கே.கே. அத்­துக்­கோ­றள, வட­மா­காண சபையின் பிர­தம செய­லாளர் ஏ.பத்­தி­நாதன், கிழக்கு மாகாண சபையின் பிர­தம செய­லாளர் டி.எம்.சரத் அப­ய­கு­ண­வர்­தன, வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபைத் தலைவர் என்.ஆர். சூரி­யா­ராய்ச்சி, தேசிய வீட­மைப்பு அதி­கார சபைத் தலைவர் எப்.எஸ். பாலன்­சூ­ரிய ஆகி­யோ­ருக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளன.

அந்தக் கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருப்­ப­தா­வது,  50 ஆயிரம் வீட­மைப்­புத்­திட்டம் நல்­லி­ணக்­கத்­துக்­கான  வீதி­களை புன­ர­மைக்கும் முன்­னு­ரி­மைத்­திட்டம், பொரு­ளா­தார மேம்­ப­டுத்தல் திட்டம் முத­லிய பல அபி­வி­ருத்தித் திட்­டங்­களை தேசிய ஒருங்­கி­ணைப்பு நல்­லி­ணக்க அமைச்சு ஆரம்­பித்­துள்­ளமை தெரிந்­ததே.

இந்த அமைச்சு ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரத்தின் கீழ் வரு­வதால் இந்தத் திட்­டங்­களை ஆரம்­பித்தல் மற்றும் கைய­ளித்தல் சம்­பந்­த­மாக ஜனா­தி­ப­தி­யுடன் நெருக்­க­மாக ஆலோ­சிக்க வேண்­டி­யுள்­ளது.

எனவே இந்த அமைச்சின் முன்­அ­னு­ம­தி­யின்றி இத்­த­கைய நிகழ்­வு­களை ஒழுங்கு செய்ய வேண்டாம் என்று கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கி­றது. இந்த செய்­தியை சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னங்­க­ளுக்கும் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கும் அனுப்­பு­வ­தற்கு கவனம் செலுத்­தவும் இவ்­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

தேசிய ஒருங்­கி­ணைப்பு நல்­லி­ணக்க அமைச்­சினால் 140 கோடி ரூபா செலவில் மண்டூர் – குறு­மண்­வெளி துறைக்கு பாலம் கட்­டப்­ப­ட­வுள்­ளது. இதற்­கான அனு­மதி அமைச்­ச­ர­வை­யினால் வழங்­கப்­பட்ட நிலையில் ஏனைய பூர்­வாங்க நட­வ­டிக்­கை­களை அமைச்சு மேற்­கொண்­டுள்­ளது. இன்­னமும் கேள்வி விளம்­பரம் கூட­செய்­யப்­ப­டவும் இல்லை. ஒப்­பந்தம் கைச்சாத்திடப்படவும் இல்லை என்று தெரியவருகிறது.

இந்த நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அடிக்கல் நாட்டு வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்த வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டதை கவனத்தில் கொண்டே மேற்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com