அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இரையை போட்டு மீனை பிடித்துள்ளார்

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பலத்த முயற்சியின் பலனாக அமைச்சரவை அலுத்கமை கலவரத்துக்கு இழப்பீடு வழங்க சம்மதம் தெரிவித்ததற்கு தான் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்கும் வேளையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இரையை போட்டு மீனை பிடித்துள்ளார் ஹிஸ்புல்லாஹ் எப்போது எதனை செய்ய வேண்டுமென நன்கு தெரிந்தவர் எனக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ச தேர்தலை நோக்காக கொண்டோ அல்லது வேறு காரணங்களை கருத்தில் கொண்டோ இவ்விடயம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் இது மகிழ்ச்சியான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை விரைவில் முறையான நீதி விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை சமூகத்திற்கு இணங்காட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

தங்கள் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற அலுத்கமை கலவரத்தின் போது பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடுகளாவது வழங்கவில்லையே உன தன்னிடம் பல தடவைகள் முஸ்லிம் சகோதர்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததாக தெரிவித்த அவர் தற்போது இழப்பீடுகளை வழங்க அமைச்சரவை சம்மதம் தெரிவித்ததன் மூலம் இந்த விடயம் நிறைவுக்கு வந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com