சற்று முன்
Home / செய்திகள் / அமைச்சரானார் டக்ளஸ் தேவானந்தா ! – அங்கஜனுக்கு வாய்ப்பில்லை ?

அமைச்சரானார் டக்ளஸ் தேவானந்தா ! – அங்கஜனுக்கு வாய்ப்பில்லை ?

பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அமைச்சரைவ இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ள நிலையில் டக்ளஸ் தேவானந்தா மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத விவகார அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இப்பதவியை முன்னர் பொறுப்பேற்றிருந்தார்.

முன்னதாக மகிந்த ஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது குறித்த அமைச்சுக்கள் டக்ளஸ் தேவானந்தா வசமிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சிறிலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் இன்றைய அமைச்சரவை நியமத்தின்போது அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கவில்லை.

கடந்த கூட்டரசில் அங்கஜன் இராமநாதன் விவசாய பிரதியமைச்சராக பதவியேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com