அமைச்சரவையின் செயற்பாடுகள் அனைத்தையும் அவைக்கு தெரிவிக்கவேண்டிய அவசியமில்லை – வடக்கு முதல்வர்

CMஅமைச்சரவையின் செயற்பாடுகள் அனைத்தையும் அவைக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் எதுவும் எமக்கில்லை. மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படவேண்டிய செயற்திட்டங்கள் அனைத்தும் உரிய நேரத்தில் வெளிப்படுத்தப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் எதிர்வரும் 14 ஆம் திகதி மேற்கொள்ளவுள்ள வெளிநாட்டு பயணம் குறித்தும் அது தொடர்பாக இங்குள்ள நிலமைகள் குறித்தும் வாகீசம் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலம் தெரிவிக்கையில்

லண்டனில் உள்ள நகரசபைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் அபிவிருத்தி சார்ந்த செயற்திட்டம் ஒன்றை உள்வாங்குவதற்கு, இரட்டை அதிகாரம் தொடர்பாக அவர்களுடன் பேசியுள்ளோம். அதை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஒரு உடன்படிக்கை கைச்சாத்திட வேண்டியுள்ளது. அதற்காக எதிர்வரும் 14ஆம் திகதி பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளோம்.

இது வெளிநாடுடன் சம்பந்தப்பட்ட விடயம் என்பதனால் அரசுடன் தான் பேச வேண்டும். இது குறித்து அரசின்; அனுசரணை பெற்று செய்துள்ளோம். அதன்படி இப்போது தான் அதற்கான பேச்சுக்கள் இடம்பெறுகின்றன. எதிர்வரும் 18 ஆம் திகதி குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பின்னர்; என்ன திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம் என தெரிவிப்போம்.
ஒரு மாகாணத்தில் பொதுமக்களுக்கான அபிவிருத்தி தொடர்பான செயற்திட்டங்களை மேற்கொள்வதற்கு அந்த மாகாண சபை, மாகாண அமைச்சுக்கள், அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் போன்றவர்கள் கையளிக்கமுடியும், கேட்க முடியும். ஆனால் அதை நடைமுறைப்படுத்தும் நிறைவேற்று அதிகாரம் அமைச்சரவைக்கு மாத்திரம் தான் உள்ளது.
அதாவது ஒரு விடயத்தை கலந்தாலோசித்து அதை நிறைவேற்ற வேண்டுமா இல்லையா என திர்மானம் எடுக்கும் அதிகாரம் அமைச்சரவைக்கு தான் உள்ளது.

ஒரு செயற்பாட்டை செய்வதற்கு முதல் அதனை அவைக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. செய்வதற்கு முதல் அனைத்து விடயங்களும் அவைக்கு போனால் அமைச்சரவை என்று ஒன்று தேவையில்லை. நிறைவேற்று அதிகாரத்தின் பெயரில் தான் அமைச்சர்குளாழம் இயங்குகிறது. நாங்கள் செயற்படுத்தவுள்ள செயற்திட்டங்கள் ஓவ்வொன்றையும் அவைக்கு தெரிவித்து அவர்களின் அனுமதி பெற்று தான் நிறைவேற்ற வேண்டும் என்ற அசியமே கட்டாயமோ சட்டமோ எமக்கு இல்லை. ஆனால் வெளிப்படைத்தன்மையின் நிமித்தம் அவைக்கு தெரியப்படுத்துகிறோம். எனவே எமது செயற்பாடுகள் உரிய நேரத்தில் வெளிப்படுத்தப்படும்.

எதிர்வரும் 14ஆம் திகதி என்னுடன் எனது செயலாளர் மற்றும் பிரதி அவைத்தலைவரான காலம் சென்ற அன்ரனி ஜெகநாதனையும் அழைத்து செல்வதாக இருந்தோம். ஆனால் அவருடைய திடீர் மறைவு எமக்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளது. எனவே எனது செயலாளருடன் வேறு ஒருவரை அழைத்து கொண்டு செல்வதற்கு ஆலோசித்துவருகிறோம். என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com