அமெரிக்க போர்க் கப்பல் தென்கொரியாவை வந்தடைந்ததால் பதட்டம் அதிகரிப்பு

வட கொரியாஇன்னொரு ஏவுகணை அல்லது அணு ஆயுத சோதனை நடத்தலாம் என்ற கவலைகளுக்கு மத்தியில், அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் தென்கொரியவை வந்தடைந்துள்ளது.
ஏவுகணைகள் பொருத்தப்பட்ட யுஎஸ்எஸ் மிச்சிகன் நீர்மூழ்சிக் கப்பல், காரல் வின்சன் விமானத்தினால் வழிநடத்தப்படும் போர்க்கப்பல் அணியோடு சேரவுள்ளது.
செவ்வாய்க்கிழமை நாட்டின் ராணுவம் நிறுவப்பட்ட 85வது ஆண்டு நினைவை வட கொரியா கொண்டாடியது. இந்த நிகழ்வை பெருமளவில் குண்டுகள் முழங்க அந்நாடு கொண்டாடி மகிழ்ந்துள்ளதாக தென் கொரியா தெரிவித்திருக்கிறது.
அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே ஏற்பட்ட சொற்போரால் சமீபத்திய வாரங்களில் இந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்துக் காணப்படுகிறது.
முன்பு கடைபிடித்துள்ள சில ஆண்டு நினைவு கொண்டாட்டங்களின்போது, அணு ஆயுத அல்லது ஏவுகணை சோதனைகளை வட கொரியா நடத்தியுள்ளதால், அது மேலதிக சோதனைகளை நடத்தலாம் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

இருப்பினும், தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம், “வழக்கத்துக்கு மாறான நிலைமைகள் எதையும் கண்டறியவில்லை” என்று தெரிவித்திருக்கிறது. மாறாக, வென்சான் நகரை சுற்றி வட கொரியா தாக்குதல் பயிற்சியை நடத்தியுள்ளதாக தென் கொரியா கூறியுள்ளது.
“வட கொரிய ராணுவத்தின் நகர்வை எமது ராணுவம் நெருக்கமாக கண்காணித்து வருகிறது” என்று தென் கொரியா கூறியுள்ளது.
ஏப்ரல் 16 ஆம் தேதி வட கொரியா நடத்திய தோல்வியில் முடிந்த பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை, அதிபர் டொனால்ட் டிரம்பை சோதிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்க துணை அதிபர் மைக் பென்ஸை தூண்டியது.

வழக்கத்திற்கு மாறான நிகழ்வாக, அமெரிக்க செனட் அவை உறுப்பினர்கள் அனைவரும் புதன்கிழமை நடைபெறும் வட கொரியா பற்றிய விளக்க கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
யுஎஸ்எஸ் மிச்சிகன் நீர்மூழ்கிக் கப்பல் தென் கொரியாவின் புசான் துறைமுகத்தை செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது. இது இந்த கப்பலின் வழக்கமான பயணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணு ஆற்றலால் இயக்கப்படும் இந்த நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் 154 டோமாஹாக் ஏவுகணைகளையும், 60 அதிரடி படைப்பிரிவுகள் மற்றும் துணைப்பிரிவுகளையும் கொண்டு வந்துள்ளது என்று தென் கொரியாவின் சோசுக் இல்போ செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
காரல் வின்சன் போர்க்கப்பல் அணியோடு ராணுவ பயிற்சியில் இந்த நீர்மூழ்கிக் கப்பல் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com