அமெரிக்க தேர்தலில் ரஷ்யா மோசடி செய்ததா – 35 அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேற ஒபாமா உத்தரவு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் இணையத்தில் ஊடுருவி ரஷியா முக்கிய தகவல்களைத் திருடியதாகவும், அதன் மூலம் தேர்தல் முடிவை மாற்ற சதி நடந்திருப்பதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை அடுத்து ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற அமெரிக்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்ட எட்வேட் ஸ்னோடன், இந்த குற்றச்சாட்டை தெரிவித்ததுடன் டொனால்டு டிரம்ப் வெற்றி பெறும் வகையில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் மாற்றம் செய்யப்பட்டதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வோஷிங்டனிலுள்ள ரஷ்ய தூதரகத்தில் இருந்து 35 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் குடும்பங்களுடன் 72 மணித்தியாலத்துக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேறவேண்டும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை வெளியேற்றப்பட்டதற்குப் பதிலாக, ரஷியாவில் பணிபுரியும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட மாட்டார்கள் என ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்துள்ளார்.
இந்த விவகாரத்திற்கு எவ்வாறு பதில் அளிப்பது என்பதற்கு அடுத்த மாதம் புதிய அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்பது வரை, தான் பொறுத்திருக்கப் போவதாக புதின் தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதரக அதிகாரிகளின் குழந்தைகளை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கும் அளவிற்கு அவரது பரிந்துரைகள் இருந்தன.
ரஷிய அரசு இணையத் திருட்டில் தனக்குத் தொடர்பு இல்லை என்று மறுத்துள்ளது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com