அமெரிக்காவில் மசூதிக்கு தீ வைப்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் மசூதி ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் விக்டோரியா நகர மசூதி ஒன்றிற்கு சனிக்கிழமை நள்ளிரவு 2 மணி அளவில் இனம்தெரியாதோர் தீ வைத்துள்ளனர். மசூதியில் இருந்து புகை வெளிவருவதை அவதானித்த ஒருவர் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நான்கு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் மசூதி முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மசூதியில் தீ பிடித்தால் எச்சரிக்கும் எச்சரிக்கை மணியை முன்னரே திட்டமிட்டு செயல் இழக்க வைத்துள்ளதாகவும்,, கதவை திறந்து வைத்ததாகவும் இமாம் ஹஸ்மி தெரிவித்துள்ளார்.
விக்டோரியா இஸ்லாமிய மத்திய நிலையமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது. நாம் அன்புள்ளத்துடன் குறித்த பள்ளிவாசலை மீண்டும் கட்டுவோம் என விக்டோரியா இஸ்லாமிய மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
ஈரான், ஈராக், சிரியா உள்ளிட்ட 07 முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவினுள் நுழைவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தடை உத்தரவின் பின்னர், குறித்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளமை அப்பிரதேசத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயினும் குறித்த விடயம் தொடர்பில் முஸ்லிம்கள் அவசர முடிவுக்கு வர வேண்டாம் என தீயணைப்பு படையின் உயர் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com