அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் இலங்கை வருகிறார்!

தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்க செயலாளரும் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கான பதில் விசேட பிரதிநிதியுமான எலிஸ் வெல்ஸ் இவ்வாரத்தில், இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளுக்கான விஜயத்தின் ஓர் அங்கமாகவே, இலங்கைக்கு அவர் வருகை தரவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தை அவர், இன்று (28) ஆரம்பிக்கின்றார். எதிர்வரும் 2ஆம் திகதியன்று தன்னுடைய பயணத்தை நிறைவு செய்துகொள்வார்.

அவர் தங்கியிருக்கும் காலத்தில், அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகள், வர்த்தகர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினரை சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

இந்நிலையில், இந்து சமுத்திர மாநாடு, கொழும்பில் எதிர்வரும் 31ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளது. அந்த மாநாட்டில்,    எலிஸ் வெல்ஸ், செப்டெம்பர் முதலாம் திகதியன்று உரையாற்றவுள்ளார்.

இந்த மாநாட்டில், இந்து சமுத்திர வலய நாடுகளில் சமாதானம், அபிவிருத்தி மற்றும் செழிப்பு ஏற்படுவது குறித்த கவனம் செலுத்தப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com