அப்துல் கலாமின் யாழ் விஜயம் கடைசியும் முதலும்

(27.07.2015) இந்திய முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல்கலாம் 2012 ஆம் ஆண்டு தை மாதம் 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.  அதுதான் அப்துல்கலாமின் யாழ்ப்பாணம் நோக்கிய முதல் பயணமும் இறுதிப் பயணமுமாகிவிட்டது. யாழ் விஜயத்தின் போது  யாழ் பல்கலைக்கழகத்திற்கும்  யாழ்   இந்துக்கல்லூரிக்கும்  விஜயம் மேற்கொண்ட அவர் யாழ் இந்துக்கல்லூரியியே உரையாற்றும் போது உங்கள் கல்லூரி 121 முறை சூரியனைச் சுற்றிவந்து பல மாணவ நட்சத்திரங்களை உருவாக்கியிருக்கிறது என்று கூறிய அவர் நான் பறந்து கொண்டேயிருப்பேன் என கவிதை பாடி அதை மாணவர்களும் பாடுமாறு கூறினார்

நான் பறந்து கொண்டேயிருப்பேன் 

நான் பிறந்துன் அரும்பெரும் சக்தியுடன் 
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்
நான் பிறந்தேன் கனவுடன், வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்

நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த
நான் பிறந்தேன் ஆராச்சி உள்ளத்துடன்,
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க,

நான் பூமியில் ஒருபோதும் தவழமாட்டேன்
தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்.
பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்துகொண்டே இருப்பேன்.

பறக்கவேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும். அந்த லட்சியத்தை அடைய என்ன செய்யவேண்டும். நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, உன்னால் வெற்றியடைய முடியும். நன்றி நண்பர்களே 2020க்குள் வளமான நாட்டைக் காண்போம் என்றார்.


(படங்கள் – மயூதரன்) 

அப்துல்ட கலாம் யாழ் இந்துக்கல்லூரியில் ஆற்றிய உரையின் முழுவடிவம். (மீள் பதிவு)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com