சற்று முன்
Home / செய்திகள் / அபிவிருத்தி என்ற பேர்வையில் நாட்டை விற்றுவரும் அரசாங்கம் தன் தவறுகளை மூடிமறைக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றது

அபிவிருத்தி என்ற பேர்வையில் நாட்டை விற்றுவரும் அரசாங்கம் தன் தவறுகளை மூடிமறைக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றது

அபிவிருத்தி என்ற பேர்வையில் நாட்டினை துண்டுதுண்டாக்கி விற்பனை செய்துவரும் நல்லாட்சி அரசாங்கம் எனக் கூறிக்கொள்ளும் இந்த அரசாங்கம் புதிய அரசிலைமப்பு செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம் என்ற போர்வையில்  தாம் செய்கின்ற பிழையான விடயங்களை மூடி மறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும் பேராசிரியருமான ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சாட்டினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அலுவலகத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படும் சூப்பர் அமைச்சர் என்பது பொய்யானது என அரசாங்கம் நாடகமாடினாலும், அதுவே உண்மை

இந்த சூப்பர் அமைச்சர் பதவி மூலம் அதிகாரம் பாரியளவில் பகிரப்படவுள்ளதாகவும், ஜனாதிபதிக்கு சமமான பலத்தின் மூலம் நாட்டை இரண்டாக பிளவுபடுத்தும் அதிகாரமும் கூட இவர்களுக்கு காணப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு வெளிநாட்டு நிறுவனத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளமை போன்ற விடயங்களுக்கு நாம் எதிர்ப்பினை வெளிக்காட்டி வருகின்றோம்

அபிவிருத்தி என்ற பேரில் நாட்டை விற்பனை செய்ய முடியாது. இவ்வாறான விடயங்களை நாம் கண்டிக்கின்ற போது எம்மை முடக்க அரசாங்கம் முயற்சிக்கின்றனர்.

இவ்வாறான விடயங்களை நாம் வெளிப்படுத்தி வருகின்ற போது புதிய அரசியலமைப்பு உருவாக்க செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தி இந்த அரசாங்கம் தாம்மால் விடப்படுகின்ற சகல தவறுகளையும் மறைத்துவருகின்றது என்றார்.

 

 

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com