சற்று முன்
Home / செய்திகள் / அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 23 பேருக்கு நியமனம்

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 23 பேருக்கு நியமனம்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகத் தேர்வாகிய 23 பேருக்கான நியமனக் கடிதங்களை வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே வழங்கி வைத்தார்.

இன்று (05) காலை 8.30 மணியளவில் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆளுநரின் செயலர் இளங்கோவன் உதவிச் செயலர் ஏ.எக்ஸ் செல்வநாயகம் பிரதிபிரதம செயலாளர் நிர்வாகம் திருமதி எஸ்.மோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வடமாகாணத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தேர்வுகள் ஏற்கனவே நடைபெற்று 197 பேர் தேர்வாகியிருந்தனர். அவர்களில் 166 பேர் மட்டுமே பயிற்ச்சிக்கான கடமைகளை பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் ஆளுநரின் விசேட அனுமதியுடன் இந்த நியமனங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com