சற்று முன்
Home / செய்திகள் / அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களை பெற்றுக் கொள்ளுதல் தொடர்பான கலந்துரையாடலுக்கு பட்டதாரிகளுக்கு அழைப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களை பெற்றுக் கொள்ளுதல் தொடர்பான கலந்துரையாடலுக்கு பட்டதாரிகளுக்கு அழைப்பு

எதிர்வரும் 19/02/2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு யாழ் மாவட்ட செயலகம் முன்பாக வேலையற்ற பட்டதாரிகளுக்கான கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இக் கலந்துரையாடலில் “தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சினால் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்ட பயிற்சி அடிப்படையிலான அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களை விரைவில் பெறுதல்” பற்றி நடைபெறவுள்ளதால் வடமாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளையும் வருகைதருமாறு பட்டதாரிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இக் கலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கமைவாக ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை 2017 இல் வெளியேறிய புதிய வேலையற்ற பட்டதாரிகளுக்கான பதிவுகளும் நடைபெறும்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com