அன்புள்ள ஜனாதிபதி மாமாவுக்கு……. ”எனது அப்பாவை விடுதலை செய்யுங்கள்”

மனைவியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்த அரசியல் கைதியான சுதாகரனின் 10 வயது பெண் குழந்தை, தாயை இழந்த நிலையில், செய்வதறியாது தந்தையுடன் சிறைச்சாலை வண்டியில் ஏறிய பரிதாப சம்பவம் கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி மருதநகர் பகுதியில் நடந்தது.

கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிளிநொச்சி, மருதநகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த சுதாகரன் என்பவரது மனைவி, கணவனின் பிரிவுத் துயரங்கள் மற்றும் குடும்ப சூழ்நிலைகள் காரணமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்துள்ள நிலையில் 3 மணி நேர அவகாசம் வழங்கப்பட்டு, மனைவியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்த சுதாகரின் 10 வயது பெண் குழந்தை தாயும் அற்ற நிலையில், செய்வதறியாது தந்தையுடன் சிறைச்சாலை வண்டியில் ஏறிய பரிதாபம் நாட்டு மக்களின் மனங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

தாய், தந்தை இருவரையும் இழந்த சுதாகரனின் மகன் மற்றும் மகள் ஆகிய இருவரும் ஜனாதிபதிக்கு மனுக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

தமது தந்தையை கருணை அடிப்படையில் விடுதலை செய்து, பெற்றோரை இழந்து நிற்கும் எமக்கு உதவுமாறு இன்று (19) ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் ஊடாக குறித்த கடிதம் ஜனாதிபதிக்கு கிடைக்கும் வகையில் இன்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

கிளிநொச்சி பிரதேச சபைகளிற்கு தெரிவான சுதந்திர கட்சி பிரதேச சபை உறுப்பினர்கள் குறித்த கடிதத்தினை பெற்று அங்கஜன் இராமநாதன் ஊடாக அனுப்பி வைத்துள்ளனர்.

இதன்போது தமது தந்தையை விடுதலை செய்து தருமாறு ஜனாதிபதி மாமாவிடம் கோரிக்கையிட்டு இன்று கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக பாதிக்கப்பட்ட சுதாகரனின் மகன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com